»   »  நடிகை பிந்துகோஷுக்கு உதவிய விஷால்

நடிகை பிந்துகோஷுக்கு உதவிய விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிந்துகோஷுக்கு உதவிய விஷால்- வீடியோ

பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள மூத்த நகைச்சுவை நடிகை பிந்துகோஷுக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நிதி உதவி வழங்கியுள்ளார்.

மருத்துவ உதவி இல்லாமல் மூத்த நடிகை பிந்துகோஷ் மிகவும் சிரமப்படுவதாக ஒரு வார இதழில் வந்த செய்தியை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் உடனடி நிதி உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கியும், அதனை தொடந்து மாதந்தோறும் ரூ.2500 உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்துள்ளார்.

Vishal's timely help to actress Bindhu Gosh

அதுமட்டுமின்றி பிந்துகோஷ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத காரணத்தால் அவரை சங்கத்தில் இணைத்து மேற்கொண்டு உதவிகள் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

Vishal's timely help to actress Bindhu Gosh

அதற்க்கான உதவித்தொகையை மூத்த நடிகை பிந்துகோஷிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் வழங்கினார்.

Read more about: vishal, actor, விஷால்
English summary
Vishal has helped timely to senior actress Bindhu Gosh

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil