பிப்ரவரி 4...முதல் ஆளா நாங்க வர்றோம்...கெத்தாக ரிலீசை கன்ஃபார்ம் செய்த வீரமே வாகை சூடும்

சென்னை : பிப்ரவரி மாதத்தில் முதலாவதாக யாருடைய படம் தியேட்டரில் ரிலீசாக போகிறது என அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கையில், இன்று அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் செய்துள்ளது விஷாலின் வீரமே வாகை சூடும்.

கொரோனா மூன்றாம் அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் உச்சமடைந்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் ஆகியவற்றை தமிழக அரசு அமல்படுத்தியது. இதனால் ஜனவரி மாதத்தில், அதுவும் பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டன.

பிப்ரவரி ரிலீசிற்கு குறி

பிப்ரவரி ரிலீசிற்கு குறி

பிப்ரவரி 1 ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து பெரிய ஸ்டார்களின் படங்களின் ரிலீஸ் தேதி உறுதி செய்யும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஜனவரியில் ஒரு சில சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீசானதால், ஜனவரியில் திட்டமிடப்பட்ட பெரிய நடிகர்கள் படங்களும் பிப்ரவரி மாத ரிலீசை குறிவைத்துள்ளன.

 நாங்க தான் ஃபஸ்ட்

நாங்க தான் ஃபஸ்ட்

ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் எந்த பெரிய நடிகரின் படம் பிப்ரவரியில் முதலில் ரிலீசாகும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் முதல் ஆளாக, வீரமே வாகை சூடும் பிப்ரவரி 4 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பலமுறை தள்ளி போன ரிலீஸ்

பலமுறை தள்ளி போன ரிலீஸ்

புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில், விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான வீரமே வாகை சூடும் படம் முதலில் தீபாவளி, பிறகு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி 14 ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்தார்கள். பிறகு குடியரசு தினமான ஜனவரி 26 அன்று சோலோவாக களமிறங்க உள்ளதாக கூறினார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அறிவிப்பு தேதி பிப்ரவரிக்கு மாற்றப்பட்டது.

இரு மொழிகளில் ரிலீஸ்

இரு மொழிகளில் ரிலீஸ்

நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஷால் நடித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன், அதிகாரம் மிக்க மோசமான கூட்டத்தை எதிர்த்து கேள்வி கேட்பது தான் வீரமே வாகை சூடும் படத்தின் கதை. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ், குமாரவேல், துளசி, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழில் வீரமே வாகை சூடும் என்ற பெயரிலும், தெலுங்கில் சாமானியடு என்ற பெயரிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X