ஆக்ஷனில் மிரட்டும் விஷால்... மாஸான வீரமே வாகை சூடும் டிரைலர் ரிலீஸ்

சென்னை : விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் மிரட்டலான டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்த படம் கடைசி நிமிடத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

அறிமுக இயக்குனரான து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி தான் தயாரித்துள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அடுத்தடுத்து தள்ளி போன ரிலீஸ்

அடுத்தடுத்து தள்ளி போன ரிலீஸ்

முதலில் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் அந்த சமயத்தில் பெரிய பட்ஜெட் படங்களான புஷ்பா, ஸ்பைடர்மேன் போன்ற படங்கள் வெளியிடப்பட்டதால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என தேதியை மாற்றினர். ஆனால் வலிமை படம் பொங்கலுக்கு வரும் என கூறப்பட்டதால் கடைசி நிமிடம் வரை குழப்பத்திலேயே இருந்து, பிறகு குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தார்கள்.

ஹீரோயினுக்கு கொரோனா

ஹீரோயினுக்கு கொரோனா

வீரமே வாகை சூடும் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக படத்தின் ஹீரோயின் டிம்பிள் அறிவித்ததால் அனைவரும் கலக்கம் அடைந்தனர்.

உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்

உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்

முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ள வீரமே வாகை சூடும் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஜனவரி 26ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஜீ நிறுவனம் பல கோடிக்கு வாங்கி உள்ளதாம்.

மாஸ் காட்டும் டிரைலர்

மாஸ் காட்டும் டிரைலர்

இந்நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் மிரட்டலாக டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன், சென்டிமென்ட், ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி வெளியிட்ட அடுத்த நிமிடமே இந்த டிரெய்லர் வீடியோவை டைரக்டர் சரவணன், குஷ்பு, லோகேஷ் கனகராஜ், ஆர்யா என பிரபலங்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

போலீஸ் ரோலில் விஷால்

போலீஸ் ரோலில் விஷால்

டிரைலரின் துவக்கத்திலேயே முகத்தில் ரத்தம் வழிய, ஒருவரின் தலையை பிடித்து இழுத்து வருகிறார் விஷால். விஷால் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது டிரைலரிலேயே தெளிவாக தெரிகிறது. இதனால் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அனைவருக்குள்ளும் அதிகரிக்க செய்கிறது. டிரைலர் வெளியிடப்பட்ட 10 நிமிடங்களில் ஆயிரக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X