»   »  விஷால் என்னை கழுவிக் கழுவி ஊத்தினார், வெளியே அனுப்பச் சொன்னார்: ரோபோ ஷங்கர்

விஷால் என்னை கழுவிக் கழுவி ஊத்தினார், வெளியே அனுப்பச் சொன்னார்: ரோபோ ஷங்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரோபோ ஷங்கரை கழுவி ஊத்திய விஷால்- வீடியோ

சென்னை: இரும்புத்திரை ஷூட்டிங்கின்போது விஷால் தன்னை திட்டியதாக ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இரும்புத்திரை படம் வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

விழாவில் ரோபோ ஷங்கர் கலந்து கொண்டு பேசியதாவது,

நன்றி

நன்றி

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும், விஷால் சாருக்கும் நன்றி. ஒரு நடிகர், ஹீரோ என்பதை தாண்டி விஷால் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.

உதவி

உதவி

உதவும் குணம் உள்ள மனிதர் விஷால். இரவும், பகலும் ஷூட்டிங் நடந்தாலும் போன் வந்து கொண்டே இருக்கும். உடனே எடுத்துப் பேசி உதவி செய்ய ஏற்பாடு செய்வார். அதற்காகவே அவருக்கு ஒரு சல்யூட்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

ஒரு சீரியஸான காட்சியை படமாக்கும்போது அனைவரும் சீரியஸான மூடில் இருப்போம். அப்போது விஷால் என்னிடம் வந்து இந்த சீனை எப்படி பண்றேன்னு பாருங்க ரோபோ என்று சொல்லிவிட்டு செல்வார்.

28 டேக்

28 டேக்

கட் பண்ணா அவ்ளோ சீரியஸான, எமோஷலான ஒரு சீனை காமெடியாக்கி தெறிக்கவிட்டு அதன் பிறகு நாம் மறுபடியும் அந்த சீனில் நடிக்கவே முடியாது. அந்த மாதிரி கிட்டத்தட்ட 28 டேக் எல்லாம் எனக்கும், அவருக்கும் போயிருக்கு.

ரோபோ

ரோபோ

என்னை அசிங்கமா கழுவிக் கழுவி எல்லாம் ஊத்தியிருக்கிறார். தயவு செய்து ரோபோவை வெளியே அனுப்புங்க, ஏன் இப்படி பண்ணுகிறார்னு பாருங்க என்று என்னை அவ்ளோ திட்டியிடிருக்கிறார் என்றார் ரோபோ ஷங்கர்.

English summary
Robo Shankar said that Vishal scolded him like anything during the shooting of Irumbuthirai directed by debutant PS Mithran. He appreciated Vishal for his helping mind.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X