»   »  தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அனைத்து முக்கிய பதவிகளையும் கைப்பற்றியது விஷால் அணி

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அனைத்து முக்கிய பதவிகளையும் கைப்பற்றியது விஷால் அணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அனைத்து முக்கியப் பதவிகளையும் நடிகர் விஷால் அணி கைப்பற்றியுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் நிர்வாக பொறுப்பை வகிந்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை அண்ணா நகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது.

Vishal Team Clean sweeps Producers Council Elcetion

இந்தத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் நம்ம அணி என்று உருவாக்கப்பட்டது. இந்த அணி இந்தத் தேர்தலில் அனைத்து முக்கியப் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது. இந்த அணியின் சார்பில் அணியின் சார்பில் இயக்குநர்கள் மிஷ்கின், பிரகாஷ்ஜ், கெளதம்வாசுதேவ்மேனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

விஷால் அணியில் விஷால், ஞானவேல்ராஜ், மி்ஷ்கின், கதிரேசன், எஸ்.ஆர். பிரபு, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் வெறஅறி பெற்றனர். ஞானவேல்ராஜா, மிஷ்கின் ஆகியோர் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டனர். பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் துணைத் தலைவர்களாகத் தேர்வாயினர்.

எஸ்.ஆர். பிரபு, பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

English summary
Actor Vishal And his Team Clean sweeped the Tamil Producers Council Elcetion which was held in Chennai Today. Most of the Vishal Team members has won in the election and gains Big victory in the Election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil