»   »  ஓட்டுப் பெட்டிக்கு பாதுகாப்பு வேணும்!- நடிகர் விஷால் போலீசில் புகார்

ஓட்டுப் பெட்டிக்கு பாதுகாப்பு வேணும்!- நடிகர் விஷால் போலீசில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குப் பெட்டிக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் விஷால் அணியினர் மனு அளித்தனர்.

பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.

Vishal team seeks additional security to vote boxes

சரத்குமார் அணியும் விஷால் அணியும் மும்முரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போது தபால் ஓட்டுப் பதிவு நடக்கிறது. நாளை மறுதினத்துடன் தபால் ஓட்டு முடிகிறது. மொத்தம் 934 தபால் ஓட்டுகள் உள்ளன.

மீதி இருக்கும் உறுப்பினர்கள் நேரடியாக வந்து வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ரஜினி, கமலும் அடங்கும்.

Vishal team seeks additional security to vote boxes

வாக்குப் பதிவு முடிந்த அன்றே பெட்டிகளைத் திறந்து வாக்குகள் எண்ணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வாக்குப் பதிவின்போதே, வாக்குப் பெட்டிகள் சேதமாகும் அல்லது களவாடப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி, வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் இன்று விஷால் அணியினர் புகார் அளித்துள்ளனர்.

விஷால், நாசர், பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகாரைத் தந்தனர்.

English summary
Actor Vishal and his team came to commissioner of police office and gave a petition and seeking additional security to vote boxes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil