»   »  'கத்தி சண்டை' ... இந்தப் படத்திலாவது தேறுவாரா 'மணவாடு' ஜெகபதி பாபு!

'கத்தி சண்டை' ... இந்தப் படத்திலாவது தேறுவாரா 'மணவாடு' ஜெகபதி பாபு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யை தொடர்ந்து விஷாலுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவுக்கு கிடைத்திருக்கிறது.

அர்ஜுன் நடித்த 'மதராஸி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெகபதி பாபு. தொடர்ந்து 'புத்தகம்', 'தாண்டவம்', 'லிங்கா' போன்ற படங்களில் நடித்தாலும், இந்தப் படங்களில் அவர் பெரிதாக எடுபடவில்லை.

Vishal Team up with Jegapathi Babu

ஜெகபதி பாபு தற்போது 'விஜய் 60' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய்யைத் தொடர்ந்து விஷாலுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது.

'மருது' படத்திற்குப்பின் சுராஜ் இயக்கும் 'கத்தி சண்டை 'படத்தில் விஷால் நாயகனாக நடிக்கிறார். இதில் விஷாலுடன் இணைந்து தமன்னா, சூரி, வடிவேலு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக பலரையும் பரிசீலனை செய்த படக்குழு தற்போது ஜெகபதி பாபுவை வில்லனாக தேர்வு செய்துள்ளனர்.

இப்படத்தில் ஜெகபதி பாபுவிற்கு ஒரு வித்தியாசமான வில்லன் வேடமாம். முந்தைய படங்களில் சாதிக்க முடியாததை, விஷால் படத்தில் சாதிப்பாரா ஜெகபதி பாபு..?பார்க்கலாம்!

English summary
Sources Said Vishal Team up with Jegapathi Babu for his Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil