இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்க்கும் விஷால்.. புதிய படத்தின் அப்டேட்!

சென்னை : பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா என்ற ஹாரர் படத்தை இயக்கியுள்ளார்.

எனிமி படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் விஷால் நடித்து வர ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஷாலின் 33வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

திரிஷா இல்லனா நயன்தாரா

திரிஷா இல்லனா நயன்தாரா

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக உள்ள ஆதிக் ரவிச்சந்திரன் ஜிவி பிரகாஷ் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கினார்.

மிரட்டலான ஹாரர்

மிரட்டலான ஹாரர்

அதன் பிறகு நீண்ட வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த ஆதிக் ரவிச்சந்திரன் நேர்கொண்ட பார்வை, k13 உள்ளிட்ட தன் படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். இப்பொழுது பிரபுதேவாவின் நடிப்பில் மிரட்டலான ஹாரர் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். 6 கதாநாயகிகள் நடித்து வரும் இப்படத்திற்கு பஹீரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இதில் பிரபுதேவா சைக்கோவாக நடித்துள்ளார்.

வீரமே வாகை சூடு

வீரமே வாகை சூடு

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. விஷால் இப்பொழுது ஆர்யாவுடன் இணைந்து எனிமி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார் அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து மிக விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் வினோத் என்பவரின் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற ஆக்ஷன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஒரே கட்டமாக நடைபெற்று வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்

அடுத்தடுத்து ஆக்ஷன் கதைகளில் பட்டையை கிளப்பி வரும் விஷாலின் 33வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவும் உள்ளது.எனிமி படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனமே, இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X