»   »  விஷால்-வரலட்சுமிக்கு விரைவில் திருமணம்?

விஷால்-வரலட்சுமிக்கு விரைவில் திருமணம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலட்சுமியுடன் எடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டு இது எல்லாவற்றையும் சொல்லும் என்று நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

வரலட்சுமி-விஷால் இருவரும் காதலர்கள் என்று திரையுலக வட்டாரங்களில் ஒரு செய்தி சமீப காலமாக அடிபட்டு வருகிறது.

இதனை உறுதி செய்வதுபோல அடிக்கடி சேர்ந்து சுற்றுவது, புகைப்படம் எடுத்து வெளியிடுவது போன்ற செயல்களை இருவரும் செய்து வருகின்றனர்.

விஷால் -வரலட்சுமி

விஷால் -வரலட்சுமி

இந்நிலையில் வரலட்சுமியுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் விஷால் இந்தப் புகைப்படம் எல்லாவற்றையும் சொல்லும் என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே இருவருக்கும் காதல் இருப்பதாக செய்திகள் அடிபட்டு வரும் நிலையில், விஷால் இப்படிக் கூறியதால் உங்கள் இருவருக்கும் திருமணமா? என்று பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

ஸ்ரீமன்

ஸ்ரீமன்

கேள்விகளுடன் இருவரையும் வாழ்த்தவும் ஆரம்பித்து விட்டனர். இதில் நடிகர் ஸ்ரீமன் அப்போ நடிகர் சங்கக் கட்டிடத்தை விரைவில் கட்டி விடுவீர்களா? என்று கேட்க அதற்கு விஷால் ஓடிவந்து 2018 ம் ஆண்டில் திறப்பு விழா நடைபெறும் என்று கூறினார். நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டி முடித்த பின்தான் திருமணம் என்று விஷால் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மொட்டை ராஜேந்திரன்

மொட்டை ராஜேந்திரன்

நடிகர் மொட்டை ராஜேந்திரன் இதற்கு என்ன அர்த்தம் சகோதரா? உங்கள் திருமணம் வரலட்சுமியுடனா? என்று கேட்க, நடிகர் பிரசன்னா உங்கள் இருவருக்கும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என்று வாழ்த்தினார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நடிகர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் விஷால்-வரலட்சுமியை வாழ்த்தி வருகின்றனர். நடிகர் சங்கக் கட்டிடம் தொடர்பாக பதிலளித்த விஷால் திருமணம் குறித்த கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. எனினும் விரைவில் இருவரின் திருமணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Vishal- Varalaksmi new Selfie Goes Viral on Social Networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil