»   »  ச்சும்மா ஜம்முனு தம்பதி மாதிரி போஸ் கொடுத்த விஷால்- வரலட்சுமி!

ச்சும்மா ஜம்முனு தம்பதி மாதிரி போஸ் கொடுத்த விஷால்- வரலட்சுமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷால் யாரைத் திருமணம் செய்து கொள்வார் என்பது ஊரறிந்த ரகசியம். இனியும் அதை ரகசியமாகவே வைத்திருக்க விரும்பாத இருவரும், நிகழ்ச்சிகளில் ஜோடியாகக் கலந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்பா சரத்துக்கும் மனம் கவர்ந்த விஷாலுக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும், அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை வரலட்சுமி. நடிகர் சங்கத் தேர்தலில் அவர் சரத்குமாருக்கு வாக்களிப்பதாகக் கூறினாலும் விஷாலுடன் ஜோடியாக சுற்றிக் கொண்டுதான் இருந்தார்.

Vishal - Varalshmi appear as couple in public function

அடுத்த நட்சத்திரக் கிரிக்கெட்டுக்கு எங்களைக் கூப்பிடவில்லை என்று சரத்குமார், ராதிகா போன்றவர்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கூலாக விஷால் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் வரலட்சுமி.

இப்போது இன்னும் ஒரு படி முன்னேற்றம். கிட்டத்தட்ட கணவன் மனைவி மாதிரி ஜம்மென்று போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று நடந்த கால்நடைகள் நல அமைப்பு ஒன்றின் விழாவுக்கு இருவரும் வந்திருந்தனர். கவர்னர் ரோசய்யா தலைமையில் நடந்த இந்த விழாவில் இருவரும் அமர்ந்திருந்த காட்சிதான் இங்கே நீங்கள் பார்ப்பது.

Vishal - Varalshmi appear as couple in public function

படம் எடுத்த புகைப்படக்காரர்களிடம் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை விஷால். இனி மறைக்க என்ன இருக்கு... நல்லா எடுத்துக்கங்கப்பா என்ற ரீதியில் இருந்தது இருவரின் சிரிப்பும்.

கடகாலும் போட்டாச்சு... அப்படியே கல்யாணத் தேதிய அறிவிச்சிடலாமே விஷால்!

English summary
In recent times actor Vishal and his long time lover girl Varalakshmi are openly appearing as couples in public functions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil