»   »  மதகஜராஜா எப்போ வரும்னு கடவுளுக்குக் கூட தெரியாது! - விஷால் விரக்தி

மதகஜராஜா எப்போ வரும்னு கடவுளுக்குக் கூட தெரியாது! - விஷால் விரக்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதகஜராஜா இனி திரைக்கு வரும் என்பதில் விஷாலுக்கே கூட நம்பிக்கை போய்விட்டது போலிருக்கிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலெட்சுமி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மதகஜராஜா'. ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. 'கடல்' படத்தை விநியோகம் செய்ததில் ஏற்பட்ட பெரும் நஷ்டம் காரணமாக, அவர்களால் மதகஜராஜாவை வெளியிட முடியவில்லை.


Vishal vexed over MadhaGajaRaja's postponement

'மதகஜராஜா' படத்தை விஷால் வாங்கி வெளியிட முன்வந்தார். அப்போதும் 'கடல்' படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் பிரச்சினை செய்யவே, பட வெளியீட்டை கைவிட்டார் விஷால்.


அதன் பிறகு விஷால் நடித்த ஆறேழு படங்கள் வந்துவிட்டன. விஷாலும் நடிகர் சங்க செயலாளராகி, திரையுலகில் முக்கிய ஆளுமையாகிவிட்டார்.


இந்த நிலையில் படத்தை வரும் மே 13-ம் தேதி வெளியிடப் போவதாக விளம்பரங்கள் வெளியிட்டனர். ஆனால் இப்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Vishal vexed over MadhaGajaRaja's postponement

இதனால் வெறுத்துப் போன விஷால், "மதகஜராஜா' எப்போது வெளியாகும் என்பது கடவுளுக்குக் கூட தெரியாது" என்று கமெண்ட் அடித்துள்ளார்.


விஷால் நடித்த இன்னொரு படம் மருது வரும் மே 20ம் தேதி வெளியாகிறது.

English summary
Vishal's long pending Madhagajaraja has been postponed again without mentioning any dates.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil