»   »  'வேல போட்டுக் கொடுங்க சார்..' - விஷாலிடம் ஏன் கேட்கிறார்கள் ரசிகர்கள்?

'வேல போட்டுக் கொடுங்க சார்..' - விஷாலிடம் ஏன் கேட்கிறார்கள் ரசிகர்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷால் சினிமா ஸ்ட்ரைக்கிற்காக ரூ 10 லட்சம் நன்கொடை!

சென்னை : விஷால், நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றதற்குக் காரணமே அவர்கள் கொடுத்த நம்பிக்கையான வாக்குறுதிகள் தான். அவற்றில் முக்கியமானது நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டியே தீருவோம் எனக் கூறியது தான்.

விஷால் அணியினர் பதவியேற்றுக்கொண்ட பிறகு, நிதி வசூலிக்க கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஒருவழியாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலர் கலந்துகொள்ள கட்டிடம் கட்ட பூஜை நடைபெற்றது.

Vishal visits nadigar sangam site works

தி.நகரில் நடிகர் சங்கத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால்.

அங்குள்ள கட்டுமானத் தொழிலாளர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து, அதை ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார் விஷால். இந்தப் பார்வையிடலின்போது நடிகர் ரமணாவும் உடனிருந்தார். கட்டிடம் உருவாவதாக பதிவிட்ட அவரது ட்வீட்டில் பல சிவில் இன்ஜினியரிங் படித்த ரசிகர்கள் வேலை போட்டுத் தரும்படி கேட்டுள்ளனர்.

English summary
Actor Vishal visits Nadigar sangam building site works.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X