twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "அசோக் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும்" - அன்புச்செழியன் பற்றி விஷால்!

    By Vignesh Selvaraj
    |

    நெல்லை : தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட தயாரிப்பாளர் அசோக் குமார் மறைவுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைபள்ளியில் நடைபெறுகிறது.

    Vishal want justice in ashok kumar suicide

    அங்கு உள்ளூர் கேபிள் டி.வி உரிமையாளர்களைச் சந்தித்த விஷால் தயாரிப்பாளர், அனுமதி பெறாமல் திரைப்படப் பாடல்கள், திரைப்படங்களை ஒளிபரப்பக் கூடாது. அதற்கு தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தினால் சட்டப்படி வெளியிட முடியும்.

    இவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார் விஷால்.

    அசோக்குமாரின் தற்கொலை விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, தயாரிப்பாளர் "அசோக்குமார் மரணத்திற்கு நியாயம் தேவை. சினிமாத்துறையில் அன்புச் செழியனுக்கு ஆதரவாக வரும் குரல்கள் அவர்களின் சொந்த கருத்து. ஏன் நான்கூட அன்புசெழியனுடன் வியாபார ரீதியான தொடர்பு உடையவன்தான்.

    ஆனால் மரணம் நடைபெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் எழுதிய கடிதத்தில் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. மரணத்திற்கு நியாயம் தேவை. அதற்காகக் காவல்துறையை நம்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Producer council president Vishal has recently said that the suicide of the producer Ashok Kumar should be justified. Vishal met local cable TV owners at Tirunelveli. "Should not telecast film songs and movies without permission. Otherwise you will be legally enforced" Vishal warned.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X