»   »  மே 30 ஸ்ட்ரைக் வாபஸ்... விஷால் அறிவிப்பு!

மே 30 ஸ்ட்ரைக் வாபஸ்... விஷால் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மே 30 முதல் தமிழ் சினிமா கால வரையற்ற அறிவிப்பு என்பதை வாபஸ் பெறுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு:

நாம் பயந்தது போல ஜி.எஸ்.டி வரி தற்போது 28% அறிவிக்கவுள்ளார்கள். நாங்கள் எந்தவொரு அரசாங்கத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழ் திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்துள்ளீர்கள்.

Vishal withdraws Cinema Strike

தணிக்கை முடிந்து வரிச் சலுகை சான்றிதழ் வாங்கி ஜுனில் வெளியாக நிறைய படங்கள் தயாராக உள்ளது. ஜுலையில் வெளியிட்டால் ஜி.எஸ்.டி வரிச் சேர்ந்து வெளியிடும் சூழல் ஏற்படும் என்றார்கள். தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வமணியும் இது தொடர்பாக பேசினார்கள். மேலும், செல்வமணி சாரும் எங்களுடைய வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். அதற்கு நன்றி.

க்யூப் பிரச்சினை

க்யூப் நிறுவனம் ஒரு படத்துக்கு 20 ஆயிரம் நிர்ணயம் செய்து முறையாக சம்பாதிக்கிறார்கள். ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு 20 ஆயிரம் வாங்குகிறார்கள். இதற்கு ஹைதராபாத்திலிருந்து ஒரு நிறுவனம் 5 ஆயிரத்துக்குச் செய்து தருகிறோம் என்கிறார்கள். அதுவும் ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய்தான். 2K, 4K, Barco, Sony போன்ற எந்தவொரு format என்றாலும் 5 ஆயிரம்தான் என்கிறார்கள். வாரத்துக்கு பணம் கட்டும் முறையில் 2500தான் என்றார்கள். அதன்படி பார்த்தால் திரையரங்கில் ஒரு காட்சிக்கு 150 ரூபாய்தான் ஆகும்.

ஆகஸ்ட் மாதத்துக்குள் 5 ஆயிரம் கட்டணத்துக்குள் செல்லாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் தயாரிப்பாளருக்கு நிறைய பணம் மிச்சமாகும். சிறு தயாரிப்பாளர்களுக்கு இதில் பாதிதான் 2500 ரூபாய் மட்டுமே.

க்யூப் நிறுவனத்தை அழைத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறோம் என்கிறார்கள் என பேசினோம். அப்போது நாங்கள் சரியான பணத்துக்குத் தான் செய்து கொடுக்கிறோம். 5 ஆயிரம் ரூபாய்க்கு வேண்டுமானால் 5 தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம் என்றார்கள்.

அப்போது பிரகாஷ்ராஜ் சார், "என்ன லஞ்சம் கொடுக்கிறாயா," எனக் கேட்டார். அப்போது போனவர்தான் பிறகு வரவே இல்லை. இப்பிரச்சினை நான் கையில் எடுத்து அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.

கேபிள் தொலைக்காட்சி

பாபா கேபிள் விஷனில் ஒரு மாதத்துக்கு 20 லட்ச ரூபாய் என ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். நம்முடைய உழைப்பைப் போட்டு அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களை அழைத்துப் பேசிய போது, 'எங்களிடம் பட உரிமை இருக்கிறது' என்றார்கள். அவரிடம் உங்களுக்கு யார் படம் போடுவதற்கு உரிமை கொடுத்த்து எனக் கேட்டால் பதில் இல்லை. அவர்களை வெளியே அனுப்பிவிட்டோம். அடுத்து வந்தவர் 60 லட்ச ரூபாய் தருகிறேன் என்றார். அவருக்கும் முடியாது எனக் கூறிவிட்டோம். தற்போது ஒன்றரை கோடி வரை கேட்கிறார்கள். அந்த ஒன்றரை கோடியே குறைவு என்று ஞானவேல்ராஜா பேசி அதற்கான பணிகளை பேசி வருகிறார். வெறும் பாடல்கள், காட்சிகள் மட்டும் போடுவதற்கு ஒன்றரை கோடி தருகிறேன் என சொல்கிறார்கள்.

1100 கேபிள் தொலைக்காட்சிக்கு ஒரு முறை போடுவதற்கு ஒரு சிறு திரைப்படம் திரையிடக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு 42 லட்சம் வரை தருகிறோம் என்கிறார்கள். இன்னும் தொலைக்காட்சி உரிமம், பாடல் உரிம்ம் உள்ளிட்ட எதுவுமே விற்காமல் 42 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது எத்தனை தயாரிப்பாளருக்குத் தெரியும்.

தேர்தலுக்கு முன்பு பல்வேறு அணிகளாக இருந்தோம். ஆனால், தற்போது அப்படியில்லை. அனைவருமே ஒரே அணிதான். தயாரிப்பாளர்கள் அனைவரும் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தால் மட்டுமே திரையுலகம் ஜெயிக்கும். கேபிள் தொலைக்காட்சி தொடர்பாக 32 மாவட்டங்களில் அலுவலகம் போடுகிறோம். அதன் மூலமாக ஒன்றரை கோடி பணம் சம்பாதித்து அது சிறு தயாரிப்பாளர்களுக்கு போய் சேரும். அதற்கு 2 மாதங்கள் நேரம் வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு என தனியாக தொலைக்காட்சி ஆரம்பிக்கலாமா என்ற எண்ணமுள்ளது. தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து தொலைக்காட்சி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என்றேன்.

திருட்டு விசிடிக்கு என தனியாக 20 பேர் கொண்ட குழு அமைக்கவுள்ளோம். இன்சூரன்ஸ் தொடர்பான முறைகேட்டை ஆராய்ந்து வருகிறோம்.

ஜிஎஸ்டி வரி வந்தவுடன் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் தனது படத்தின் வியாபாரம் என்னவாகிறது என்பது தெரிந்துவிடும். இனிமேல் தவறாகப் போய் பணம் திரும்ப வேண்டும் என கேட்க முடியாது. இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒவ்வொரு படத்தின் வசூல் என்ன என்பது தெரியவரும். மல்டிப்ளக்ஸ் மட்டுமன்றி அனைத்து திரையரங்குகளுக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை என்பது வைக்க வேண்டும். எத்தனை பேர் படம் பார்க்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியவரும்.

ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு 120 ரூபாய், ஜிஎஸ்டி வந்தவுடன் 153 ரூபாய் வரும், இணையத்தில் டிக்கெட் புக் செய்தால் அவர்கள் 30 ரூபாய் ஒரு டிக்கெட்டுக்கு வாங்குகிறார்கள். ஒரு ரசிகர் படம் பார்ப்பதற்கு அவர்களுக்கு பணம் போகீறது. ஆகவே தயாரிப்பாளர் சங்கமே தனியாக இணையம் தொடங்கும். அப்பணம் தயாரிப்பாளருக்கு வருவதில்லை. நமது பட்த்தை திரையரங்கில் போடுவதற்கு வேறு ஒருத்தர் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். ஆகவே தயாரிப்பாளர் சங்கத்தின் இணையத்தில் அது 10 ரூபாயாக இருக்கும். அதில் 2 ரூபாய் தயாரிப்பாளர் நன்மைக்கு கொடுக்கப்படும்.

எங்களுக்கு க்யூப், கேபிள் உள்ளிட்ட எதிலிருந்தும் கமிஷனே வேண்டாம். இந்த பதவியை வைத்து சூப்பர் ஸ்டார் பண்ண விரும்பவில்லை.

எங்களுடைய அழைப்பை ஏற்று சில திரைப்படங்கள் தங்களுடைய வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் நன்றியும், மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு படத்தின் தயாரிப்பு நிலையில் இருக்கும் போதே, எப்போது வெளியிடலாம் என்று முடிவு செய்கிறீர்களோ அதை தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவியுங்கள். அதற்கான ஒரு மொபைல் ஆப் தயாராகி வருகிறது. இணையம், மொபைல் ஆப் ஆகியவை தயாரானவுடன் இனிமேல் படத்தலைப்பு பிரச்சனைகள் அனைத்தையுமே ஒரே க்ளிக்கில் முடித்துவிடலாம். படத் தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பில் பிரச்சினையும் பதிவு செய்தீர்கள் என்றால் நாங்களே உங்களைத் தொடர்பு கொள்வோம். தொலைக்காட்சி, திரையரங்கம், இசை உள்ளிட்ட எந்தவொரு உரிமையும் விற்றீர்கள் என்றால் அதையும் இணையத்தில் தெரிவியுங்கள். ஏனென்றால் நாங்கள் பண்ற வியாபாரம் உங்களுக்கு தெரியும். நீங்கள் செய்வது எனக்கு தெரியும்.

ஒரு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷாலை தேர்ந்தெடுத்துள்ளோம். 1 மாதமாகிவிட்டது. இன்னும் 23 மாதங்கள் இருக்கிறது. நவம்பருக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும்.

தயாரிப்பாளர்கள் மட்டுமே உங்களுக்கு படத்துக்கு ராஜா. தயவு செய்து அதை மனதில் செய்யுங்கள். என்ன பிரச்சினை என்றாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள். உங்களுக்கான சரியான தொகை கிடைக்க வேண்டும் என்றுதான் உழைத்து வருகிறோம். நம்முடைய படத்தைத் தவறாக உபயோகித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் பணம் அவர்களுக்குத்தான் கிடைக்க வேண்டும், வேறு யாரும் ஆட்டையப் போடக் கூடாது. பஞ்சாயத்து என்பதற்கே இங்கு இடமில்லை. வெளிப்படைத் தன்மை அனைத்து விஷயங்களிலும் கடைப்பிடிக்கப்படும்.

பழைய சங்கம் போல இங்கு கோஷம் போட முடியாது. இந்த வேலை நிறுத்தத்தைப் வாபஸ் பெறுகிறோம். ஏனென்றால் செல்வமணி சார் வந்து பேசி முடிவு செய்தார். அனைவரும் சங்கத்துக்கு வாருங்கள், நல்லது மட்டுமே செய்ய காத்திருக்கிறோம்...",
என்று கூறியுள்ளார் விஷால்.

English summary
Producers Council President Vishal has withdrawn the cinema strike proposed from May 30th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil