Don't Miss!
- News
பரபர சூழலில் இன்று கூடும் நாடாளுமன்றம்.. அதானி விவகாரத்தை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள்
- Technology
அட்டகாசமான வடிவமைப்புடன் இந்தியாவில் களமிறங்கும் கோகோ கோலா போன்: அறிமுகம் தேதி இதுதான்.!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி
பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி நடிகர் விஷ்ணு விஷால் & இயக்குநர் ராம்குமார் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம்
நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் வெற்றிகரமான நாயகனாக வலம் வருகிறார். தொடர் வெற்றியைத் தரும் திரைப்படங்களைத் தருவதன் மூலம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களால் மதிப்புமிக்க நட்சத்திரமாகப் பாராட்டப்படுகிறார் .

இயக்குநர் ராம் குமார் திரையில் தனித்துவமான உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதைகளைப் படைத்து வெற்றி பெற்றுள்ளார். அவரது முதல் இயக்கமான 'முண்டாசுப்பட்டி' நகைச்சுவை திரைப்படமாக இருந்தபோதிலும், அவர் தனது இரண்டாவது திரைப்படமான 'ராட்சசன்' மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், அப்படம் அதிரச்செய்யும் உளவியல் திரில்லராக அசத்தியது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் பழைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேறு வகை ஜானரில் ஒரு புதிய படைப்பை உருவாக்குவதில் இந்த கூட்டணியுடன் இணைவதில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் மகிழ்ச்சி கொள்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், பெரிய பட்ஜெட்டில் நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையை ஃபேண்டஸி கலந்து சொல்லும் படமாக இருக்கும். இந்த வெற்றிகரமான காம்போவின் இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், இந்த படம் அதன் ஹாட்ரிக் ஸ்பெல்லை நிறைவு செய்யும் என்பது உறுதி. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.