Just In
- 5 min ago
பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கவின்.. டிரெண்டாகும் #Kavin.. கொண்டாடும் ரசிகர்கள்!
- 20 min ago
நாடி பட படக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்..செம சூடா இருக்கு.. உசுப்பேத்தும் கமல்..இரண்டாவது புரமோ!
- 32 min ago
'ஆன்மாவின் கண்ணாடின்னு சொல்றாங்களே..?' முன்னாள் ஹீரோயின் வெளியிட்ட வாவ் போட்டோஸ்!
- 1 hr ago
இது எப்ப? நடிகர் சோனு சூட் தையல் கடை.. இங்கு இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும்!
Don't Miss!
- Finance
ஆர்பிஐ-யின் கொள்கைகள் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவின.. சக்திகாந்த தாஸ் பளிச்..!
- Sports
நோ லுக் சிக்ஸ்.. கண்ணை மூடிக்கொண்டு துல்லியமாக சிக்ஸ் அடித்த "சுந்தர்".. வைரலாகும் வீடியோ!
- News
நடுவானில் தொழில்நுட்ப கோளாறு... அவசரமாக தரையிறங்கிய பெங்களூரு விமானம்!
- Automobiles
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காபி வித் டிடி தெரியும்.. இது புதுசால இருக்கு.. யானை மேல் விஷ்ணு விஷால்.. என்னா பண்றாரு?
சென்னை: காடன் படத்தின் ஷூட்டிங்கின் போது, யானை ஒன்றின் மீது, படுத்துக் கொண்டு நடிகர் விஷ்ணு விஷால், காபி குடிக்கும் வீடியோவை தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பிறகு, விஷ்ணு விஷால், நடிப்பில் காடன் மற்றும் எஃப்.ஐ.ஆர் படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
விஷ்ணு விஷால், தற்போது வெளியிட்டுள்ள, வீடியோவை பார்த்த அவரது காதலி, ஜுவாலா கட்டா யார் இதனை படம் பிடித்தது, சூப்பரா இருக்கு என கமெண்ட் செய்துள்ளார்.

கும்கியை தொடர்ந்து
கும்கி படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பிரபு சாலமன், மீண்டும் யானையை மையமாக வைத்து காடன் எனும் படத்தை இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ராணா டகுபதி மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 2ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

புது ரூட்டு
எஃப்.ஐ.ஆர் படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்த விஷ்ணு விஷால், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது வாழ்க்கையில், நடந்த கசப்பான சம்பவங்களை ரசிகர்கள் முன்பாக பகிர்ந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக, திட்டமிட்ட படியே, தனது புதிய காதலியான பேட்மிண்டன் வீராங்கனை ஜூவால கட்டாவை காதலர் தினத்தன்று வெளிப்படையாக அறிமுகம் செய்தார்.

ஒரே விளையாட்டுத் தான்
தனது மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால், தனது புதிய காதலியான ஜுவாலா கட்டாவுடன் பேட்மிண்டன் ஆடும் வீடியோக்களையும், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தங்களது ரொமான்ஸை கொஞ்சம் கொஞ்சமாக ரிவீல் செய்து, காதலர் தினத்தன்று, மொத்தமாக ஓப்பன் செய்திருந்தார்.
|
யானையின் மேல்
பெட் காபி குடிப்பது போல, நடிகர் விஷ்ணு விஷால், உன்னி கிருஷ்ணன் என்ற யானையின் மீது, படுத்தபடி காபி அருந்தும் புதிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படி ஒரு அனுபவத்தை தனது வாழ்நாளில் எதிர்பார்த்தது இல்லை என்றும், காடன் திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி திரைக்கு வருகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
|
ஆஜரான காதலி
விஷ்ணு விஷால், யானை உன்னி கிருஷ்ணன் மீது படுத்தபடி காபி கொடுத்த வீடியோவை போட்ட கொஞ்ச நேரத்திலேயே, சொல்லி வைத்தது போல அவரது புதிய காதலி, ஜுவாலா கட்டா, "யார் படம் பிடித்தா, ரொம்ப நல்ல படங்கள்.. நான் வியக்கிறேன்.. என்ற ரீதிக்கு கமெண்ட் போட்டுள்ளார். ஆனால், அது வீடியோ என்பதை கூட ஜூவாலா கவனிக்க வில்லையோ?
|
சரி இல்லையே
விஷ்ணு விஷால் வீடியோவை போட, அதற்கு உடனடியாக ஓடி வந்து ஜுவாலா கட்டா கமெண்ட் போட, என்னடா நடக்குது இங்கே என ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கழுவி ஊற்றத் தொடங்கி உள்ளனர். இவங்க ரெண்டு பேரும், ட்விட்டரில் செய்யும் அலப்பறையை பார்த்த இந்த நெட்டிசன், "சரி இல்லையே" என கமெண்ட் செய்துள்ளார்.
|
வேற லெவல் காபி டேபிள்
யானை மீது காபி அருந்தும் விஷ்ணு விஷாலின் வீடியோ, அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வேற லெவல் காபி டேபிள் பிரதர், ஜாக்கிரதையா இருங்க, விழுந்துட போறீங்க, உங்கள் நடிப்பில் இன்னும் நிறைய படங்கள் வெளியாகணும், அதை நாங்க பார்க்கணும் என இந்த ரசிகர், அக்கறையுடன் கமெண்ட் செய்துள்ளார்.
|
உங்க சேட்டை செம
காடன் படப்பிடிப்பு தளத்தில், யானை மீது படுத்துக் கொண்டு காபி அருந்தும் வீடியோவை வெளியிட்டு விஷ்ணு விஷால் வைரலாக்கி வருகிறார். அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள், செம தில் என்றும், அருமை என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ரசிகர், நண்பா.. உங்க சேட்டை செம.. பயமா இல்லையா உங்களுக்கு என்றும் கேட்டுள்ளார்.