Don't Miss!
- News
தேடி வந்த காலம் போய் ஆதரவை தேடி ஓடும் காலம் வந்துவிட்டதே.. அதிமுக குறித்து பூங்குன்றன் வேதனை
- Technology
வந்ததும் ஆப்பு வைத்த Netflix CEO: மொத்த கவனமும் இந்தியர்கள் மீதுதான்.. தொட்டால் கெட்டோம்!
- Sports
"நீ தந்த வெளிச்சத்தில் காதல் கற்றேன்".. கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம்.. நெகிழ்ச்சி பதிவு!
- Finance
Ford நிறுவனத்தின் அதிரடி முடிவு.. 3200 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. எங்கு தெரியுமா?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
ஏய் எப்புர்ரா... H D குவாலிட்டியில் யூடியூப்பில் வெளியான கட்டா குஸ்தி... யார் பார்த்த வேலைடா இது?
சென்னை: விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கருணாஸ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியது.
திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான கட்டா குஸ்தி, தற்போது யூடியூப்பிலும் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நடிகையுடன் பார்ட்டி.. அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான் மகன்.. பதான் என்னவாகும்?

கலக்கிய கட்டா குஸ்தி
விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. விஷ்ணு விஷால் ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்த இந்தப் படத்தை செல்ல ஐய்யாவு இயக்கியுள்ளார். மேலும் கருணாஸ், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த கட்டா குஸ்தி, காமெடி ஜானரில் கமர்சியலாக உருவாகியிருந்தது. பழைய ஹீரோயிசம் மரபுகளை உடைத்து விளையாட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம், பெண் சுதந்திரம் என்பதை குஸ்தியின் பின்னணியில் இயக்கியிருந்தார் செல்ல ஐய்யாவு.

ஐஸ்வர்யாவின் ஆக்ஷன் அதகளம்
தமிழ் சினிமாவில் காட்டப்படும் வழமையான நாயகியாக இல்லாமல் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆக்ஷனில் அதகளம் செய்திருந்தார். குஸ்தி சாம்பியனாக மாஸ் காட்டிய ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கோயில் முன்பு ரவுடி கும்பலிடம் மாட்டிய தன் கணவன் விஷ்ணு விஷாலை காப்பாற்றும் காட்சியில் ஆக்ஷனில் வெறித்தனமாக தூள் கிளப்பியிருப்பார். விஷ்ணு விஷாலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ஹீரோவாக நடித்து ஸ்கோர் செய்திருந்தார். பாசிட்டிவான விமர்சனங்களால் நல்ல ஓப்பனிங் கிடைத்த கட்டா குஸ்தி, பாக்ஸ் ஆபிஸில் 30 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

யூடியூப்பில் ரிலீஸ்
திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் கட்டா குஸ்தி வெளியானது. தியேட்டரில் இந்தப் படத்தை பார்க்க முடியாமல் மிஸ் செய்த ரசிகர்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து நெட்பிளிக்ஸில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கட்டா குஸ்தி திரைப்படம் தற்போது யூடியூப்பில் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

HD குவாலிட்டியில் கட்டா குஸ்தி
அதுவும் தரமான HD குவாலிட்டியில் கட்டா குஸ்தி திரைப்படம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் கட்டா குஸ்தி திரைப்படத்தை யூடியூப்பில் பார்த்து ரசித்து வருகின்றனர். அதேநேரம் இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எதுவும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.