என் படங்களுக்காக யாரும் காத்திருக்கவில்லை.. நான் ஸ்டார் இல்லை.. விஷ்ணு விஷால்!
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அடுத்து அவர் நடிப்பில் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுத்தந்து. இதையடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'ஆர்யன்'. இதன் டிரைலர் நேற்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கியுள்ளார். செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மனதில் இருக்கும் ஆதங்கத்தை பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதில், இந்த 2025ஆம் ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பானதாக ஆண்டாகவே இருந்தது, நிறைய நல்ல விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்தன. எனது மகள் மீரா பிறந்ததே இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு. அத்துடன், எனது மகன் பெயரைக் கொண்ட 'ஆரியன்' திரைப்படம் வெளியாக இருக்கிறது திரைப்படங்களில் மக்கள் அதிகம் எதிர் பார்க்கும் ஒருவர் தான் நட்சத்திர நடிகர். என்னுடைய திரைப்படங்களுக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை ஒரு நட்சத்திரமாகக் கருதவில்லை. ஒரு நாள் நான் அந்த இடத்திற்கு வருவேன் என்கிற நம்பிகை இருக்கிறது. இதற்கு நீண்ட ஆண்டுகள் ஆகும், ஏனெனில் நான் ஒரு வித்தியாசமான, வணிக ரீதியற்ற பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

நடிகர் விஷ்ணு விஷால்: 'ராட்சசன்' போன்ற ஒரு த்ரில்லர் படத்தை மீண்டும் எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தபோது, "'ஆரியன்' படத்தை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். அதன் திரைக்கதை மூலம் அந்த மனநிலையை மாற்றும் என நினைக்கிறேன். 'ஆரியன்' ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம், ஆனால், கதை, திரைக்கதை மற்றும் வழங்கல் 'ராட்சசனுக்கு' முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். எனது படங்களில் எப்போதும் ஒரு சிறப்பான அம்சம் இருக்கும், இந்தப் படத்தின் தனிச்சிறப்பு செல்வராகவன் சார் தான். நான் ஒரு முழுமையான த்ரில்லர் படங்களில் நடித்ததால், த்ரில்லர் நடிகர் என்ற முத்திரையைப் பெற்றுள்ளேன். இதை நான் மூலதனமாகவும்ஆக்கலாம் அல்லது அதிலிருந்து விலகிச் செல்லலாம், ஆனால், அதை மூலதனமாக்க முயற்சிக்கிறேன். விஷ்ணு ஒரு த்ரில்லர் படத்தில் நடித்தால், அந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் வர வேண்டும் என்றார்.
கட்டா குஸ்தி 2: தொடர்ந்து பேசிய விஷ்ணுவிஷால், 'ஆரியன்' படப்பிடிப்பை முன்னதாகவே தொடங்கிவிட்டோம். ஆனால், ஆனால் 'லால் சலாம்' மற்றும் 'இரண்டு வானம்' போன்ற படங்களில் நடித்துக்கொண்டு இருந்ததால, இந்த படம் தாமதமானது. இதுபோன்ற தாமதங்களைத் தவிர்க்க, என் தயாரிப்பில் ஐந்து படங்களுக்குத் திட்டமிட்டுள்ளேன். அருண்ராஜா காமராஜ் இயக்கும் படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளேன், இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க உள்ளது. 'கட்டா குஸ்தி 2' படத்தை எடுக்கும் எண்ணம் உள்ளது அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது என்றார்.
ஓடிடி பற்றி பேசிய விஷ்ணுவிஷால், இப்போது திரைப்படம் இரண்டு முறை வெளியாகிறது. முதலில் திரையரங்குகளில், பின்னர் OTTயில். திரையரங்குகளிலும் OTTயிலும் சிறப்பாகச் செயல்படும் திரைப்படம் மிகவும் அரிதாகவே உள்ளது. திரைப்படங்கள் திரையரங்குகளில் கொண்டாடப்பட வேண்டியவை, அதற்காக OTTயில் படம் பார்க்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. திரையரங்கில் அமர்ந்து நண்பர்களுடன் விசில் அடித்து கைதட்டும் மகிழ்ச்சி தனியாக அமர்ந்து படம் பார்த்தால் கிடைக்காது என்று விஷ்ணு விஷால் பேட்டியில் பல விஷயம் பற்றி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











