நெவர்...எவர்...கிவ் அப்...வைரலாகும் விஷ்ணு விஷாலின் ஐஸ் பாத் வீடியோ
சென்னை : அதிக ஹிட்களை கொடுக்கா விட்டாலும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ரோல்களை தேர்வு செய்யும் நடிக்கும் ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால். அதைத் விட ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.
விஷ்ணு விஷால் சிறந்த கிரிக்கெட் வீரரும் கூட. கடந்த சில ஆண்டுகளாக நிறைய ஃபிசிக்கல் மற்றும் மென்ட்டல் சேலஞ்ச்களை எதிர்கொண்டு வந்துள்ளார் விஷ்ணு விஷால். இவர் சமீபத்தில் தான் பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா ஹட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

விஷ்ணு விஷாலின் ஐஸ் பாத்
திருமணத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் வெளியிடும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் ஆகட்டும், தெரபி ஃபோட்டோ ஆகட்டும் அனைத்தும் தாறுமாறாக வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ஐஸ் பாத் எடுத்த வீடியோவையும் விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.

நெவர் எவர் கிவ் அப்
பின்னணியில் அஜித் நடித்த விவேகம் படத்தில் இடம்பெற்ற, நெவர் எவர் கிவ் அப் பாடல் ஒலிப்பது போன்று இந்த ஐஸ் பாத் வீடியோ அமைந்துள்ளது. நெவர் கிவ் அப் என கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். விவேகம் படத்தில் பனிக்கட்டிகள் சூழ்ந்த பகுதியில் குளிரில் இருந்து பாதுகாக்கவும், உடலை வலிமைப்படுத்தவும் அஜித், பனிக்கட்டியில் ஒர்க் அவுட் செய்வார்.

ஐஸ் பாத் ரகசியம் இதுதானா
இந்த ஐஸ் பாத் தசைகளை வலிமையாக்கி, நரம்பு மண்டலத்திற்கு பலம் தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒர்க் அவுட் செய்பவர்கள் அல்லது போட்டியில் பங்கேற்கும் தடகள வீரர்கள் இது போன்ற ஐஸ் பாத் எடுப்பது வழக்கம். உடலை ஃபிட்டாக பாதுகாக்க இது உதவும் என்பதாலேயே பல பிரபலங்கள் இந்த ஐஸ் பாத்தை எடுத்து வருகின்றனர்.

விஷ்ணுவின் எஃப்ஐஆர்
விஷ்ணு விஷால் தற்போது தானே தயாரிக்கும் எஃப்ஐஆர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











