கட்டா குஸ்தி ட்ரெய்லரில் விஜய்யை வம்பிழுத்த விஷ்ணு விஷால்… வாரிசு ரிலீஸ் பிரச்சினைல இது தேவையா?

சென்னை: விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஷ்ணு விஷால் ஜோடியாக ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி நடித்துள்ள கட்டா குஸ்தி டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், கட்டா குஸ்தி ட்ரெய்லரில் விஜய்யை வம்பிழுக்கும் விதமாக இடம்பெற்றுள்ள வசனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டா குஸ்தி ட்ரெய்லர் ரிலீஸ்

கட்டா குஸ்தி ட்ரெய்லர் ரிலீஸ்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஜோடியாக நடித்துள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விஷ்ணு விஷாலும் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்துள்ள கட்டா குஸ்தி படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். கட்டா குஸ்தி திரைப்படத்தில் கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். இந்தப் படம் காமெடி ப்ளஸ் ஆக்சன் என கமர்சியலாக உருவாகியுள்ளதை ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது.

இதுதான் கதையா?

இதுதான் கதையா?

கட்டா குஸ்தி படத்தின் கதை படி, கபடி, சண்டை என ஊரில் மீசையை முறுக்கிக் கொண்டு அலையும் விஷ்ணு விஷாலுக்கு கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா லெக்‌ஷ்மியுடன் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் விஷ்ணு விஷாலைப் போல வம்பு சண்டைகளில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில், கேரளாவின் பாரம்பரியமான குஸ்தி விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என விஷ்ணு விஷாலுக்கு சவால் விடுகிறார் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி. இந்த சவாலில் விஷ்ணு விஷால் வென்றாரா இல்லையா என்பது தான் மொத்த கதையும் எனத் தெரிகிறது.

விஜய்யை வம்பிழுத்த விஷ்ணு விஷால்

விஜய்யை வம்பிழுத்த விஷ்ணு விஷால்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹீரோவுக்கும் கேரளாவைச் சேர்ந்த நாயகிக்கும் நடக்கும் திருமணமும் அதன் பின்னணியும் தான் கதைக்களம். இந்நிலையில், கட்டா குஸ்தி ட்ரெய்லரில் ஒரு காட்சியில், "பத்ரி படத்துல பாக்ஸிங்கே கதின்னு கிடந்த அண்ணன விட, கடைசில வேடிக்கை பார்த்துட்டு இருந்த நம்ம தளபதி விஜய் தான் கப் அடிச்சார்" என ரெடின் கிங்ஸ்லி பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இது விஜய்யை புகழ்வது மாதிரி இருக்கா இல்லை கலாய்க்கிறார்களா என ரசிகர்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வாரிசு திரைப்படம் ரிலீஸாவதில் சிக்கல் இருக்கும் நிலையில், கட்டா குஸ்தி படத்தில் இப்படி வசனம் தேவையா என விஜய் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கட்டா குஸ்தி ரிலீஸ் தேதி

கட்டா குஸ்தி ரிலீஸ் தேதி

கட்டா குஸ்தி படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி கட்டா குஸ்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கட்டா குஸ்தி திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள கட்டா குஸ்தி விஷ்ணு விஷாலுக்கு சக்சஸ் கொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X