Aaryan X Review: ஆர்யன் ட்விட்டர் விமர்சனம்.. விஷ்ணு விஷாலுக்கு மீண்டுமொரு ராட்சசனா? படம் எப்படி?
சென்னை: இயக்குநர் பிரவீன். கே இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழில் இந்த வாரமும் தெலுங்கில் அடுத்த வாரமும் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமெளலியின் பாகுபலி தி எபிக் திரைப்படம், ரவி தேஜாவின் மாஸ் ஜத்தாரா உள்ளிட்ட படங்களும் இந்த வாரம் போட்டியாக வெளியாகும் நிலையில், தெலுங்கு மொழியில் ஆர்யன் படத்தை வெளியிடும் முடிவை விஷ்ணு விஷால் தள்ளிப்போட்டுள்ளார்.

இன்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், பலரும் படம் தாறுமாறான த்ரில்லர் படமாக உள்ளது என்றும் அடுத்த ராட்சசன் படம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இதாண்டா சினிமா: விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் படத்தை பார்த்த இந்த நபர், இடைவேளை காட்சி வேறலெவல் என்றும் இதாண்டா சினிமா என்றும் திரைக்கதை ரொம்பவே பிரில்லியன்ட்டாக உருவாக்கப்பட்ட நிலையில், படத்தின் கதையையும் ட்விஸ்ட்டையும் யூகிக்கவே முடியவில்லை என பாராட்டி படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.
4 ஸ்டார் ரேட்டிங்: இயக்குநர் பிரவீன் ஒட்டுமொத்தமாக ஒரு புதிய உலகத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிட்டார். இப்படியொரு இன்வெஸ்டிகேஷன் ஜானர் படம் சமீபத்தில் வந்ததே இல்லை. அந்த அளவுக்கு படம் புதுசாகவும் கடைசி வரை விறுவிறுப்பாகவும் உள்ளது. விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியுள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பு சிறப்பு. இந்த படத்துக்கு 5க்கு 4 ஸ்டார் கொடுக்கலாம் என இந்த நபர் படத்தை கொண்டாடியுள்ளார்.
ரமேஷ் பாலா விமர்சனம்: பிரபல பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர் மற்றும் விமர்சகரான ரமேஷ் பாலா விஷ்ணு விஷாலின் ஆர்யன் படத்தை பார்த்துவிட்டு அவரும் 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். இது ராட்சசன் கிடையாது என்றும் ராட்சசனை விட சிறப்பாக உள்ளதாக படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் பாராட்டி வருகின்றனர். பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்படம் வின்னராக மாறியுள்ளது. வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்துக்கு மக்கள் மத்தியிலும் இதே போன்ற வரவேற்பு கிடைத்தால் விஷ்ணு விஷாலுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் படமாக இந்த ஆர்யன் மாறும்.


Click it and Unblock the Notifications











