அஜித்தை வைத்து பில்லா 3 எடுப்பீங்களா...டைரக்டர் கொடுத்த நச்சு பதில்

சென்னை : அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் டைரக்டர் விஷ்ணுவர்தன். இவர் 2007 ம் ஆண்டு அஜித்தை வைத்து பில்லா படத்தை இயக்கினார்.

ரஜினி நடித்த பழைய பில்லா படத்தின் கதை தான். படத்தின் டைட்டில், கதையை அப்படியே ரீமேட் செய்தாலும், அசத்தல் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக எடுத்திருந்தார். படத்தின் கதை முழுவதும் மலேசியாவில் நடப்பதாக எடுத்திருந்தார்.

பிளாக்பஸ்டரான பில்லா

பிளாக்பஸ்டரான பில்லா

ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு, சூப்பர் ஹிட் படமாக அமைந்தது பில்லா. அதைத் தொடர்ந்து பில்லா 2 படத்தை இயக்கினார். இதுவும் கேங்ஸ்டர் கதை தான். படம், பாடல், ஆக்ஷன் என அனைத்திலும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்து, பாராட்டை பெற்றது.

பில்லா 3 எடுப்பீங்களா

பில்லா 3 எடுப்பீங்களா

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த விஷ்ணுவர்தனிடம் அஜித்தை வைத்து பில்லா 3 படத்தை இயக்குவீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் எதையம் பிளான் பண்ணவில்லை. அதனால் இது போன்ற படங்களை பற்றி ஆழமாக சென்று ஆராய்ச்சி செய்வதை நீங்கள் விடுங்கள். அப்போது நீங்கள் நிறுத்தினாலே அனைத்தும் நன்றாக நடக்கும் என்றார்.

மனம் திறந்த விஷ்ணுவர்தன்

மனம் திறந்த விஷ்ணுவர்தன்

இதனால் பில்லா 3 படத்தை எடுக்கும் எண்ணம் இப்போதைக்கு விஷ்ணுவர்தனிடம் இல்லை என்றே சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவரின் இந்த பதில் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. மேலும் இந்த பேட்டியில் தனது ஆரம்ப கால வாழ்க்கை, விஜய் மற்றும் அஜித் பற்றிய தனது கருத்து, பல மறக்க முடியாத சமபவங்கள் போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

இந்திய சினிமா தான் அழகு

இந்திய சினிமா தான் அழகு

2009 ல் ஆர்யாவை வைத்து சர்வம் படத்தை இயக்கியவரும் இவர் தான். என்ன தான் ஓடிடி.,யில் படம் பார்த்தாலும் தியேட்டரில் பார்க்கும் அனுபவம் தான். தியேட்டரில் படம் பார்ப்பது தான் தனக்கு பிடிக்கும் என கூறி விஷ்ணுவர்தன், பாலிவுட் - கோலிவுட் என்ற இடைவெளி இருக்கக் கூடாது. இந்திய சினிமாவாக மாற வேண்டும். அப்படி மாறினால் அதன் அழகே தனி தான் என்றார்.

கார்கில் வீரரின் வாழ்க்கை படம்

கார்கில் வீரரின் வாழ்க்கை படம்

சித்தார்த் மல்கோத்ரா, கியாரா அத்வானியை வைத்து Shershaah என்ற படத்தை சமீபத்தில் தான் எடுத்து முடித்தார் டைரக்டர் விஷ்ணுவர்தன். ஆகஸ்ட் 12 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட இந்த படம் கார்கில் போர் வீரரான விக்ரம் பலத்ராவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X