»   »  சரித்திரப் படத்தை கையில் எடுக்கும் விஷ்ணுவர்த்தன்

சரித்திரப் படத்தை கையில் எடுக்கும் விஷ்ணுவர்த்தன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுநாள்வரை காதல் மற்றும் த்ரில்லர் படங்களை எடுத்து வந்த இயக்குநர் விஷ்ணுவர்த்தன் முதன்முறையாக ஒரு சரித்திரப் படத்தை எடுக்கவிருக்கிறார்.

மூத்த எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாலகுமாரனுடன் இணைந்து இந்தப் படத்திற்கான கதையை விஷ்ணுவர்த்தன் தயார் செய்து கொண்டிருக்கிறார்.

Vishnuvardhan's Next Project

இதைப் பற்றி அவர் கூறும்போது "இந்தக் கதைக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றி அலைந்து பல தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். பல்வேறு கல்வெட்டுகளில் நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் கோவில் கல்வெட்டுகளில் உள்ள தகவல்களை வைத்து இந்தப் படத்திற்கான கதையை எழுதவிருக்கிறேன். 9 ம் நூற்றாண்டில் உள்ள மக்களின் வாழ்க்கை அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவைதான் படத்தின் மையக்கரு" என்று கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், கதை தயாரானதும் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கவிருப்பதாகவும் விஷ்ணுவர்த்தன் தெரிவித்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பே சரித்திரப் படத்தை எடுக்க வேண்டும் என்று நினைந்த விஷ்ணுவர்த்தனுக்கு இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்திருக்கிறதாம்.

விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Director Vishnuvardhan now Team Up with Veteran Writer Balakumaran. Vishnu Reveals his Next Project, He Says "My Next is a Period Film set in the 9th Century".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil