For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆர்யாவை அழுக்காகக் காட்டுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்!- விஷ்ணுவர்தன்

  By Shankar
  |

  விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி, ஸ்வாதி, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் யட்சன். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது இந்தப் படம்.

  எழுத்தாளர்கள் சுபா இந்த படத்தின் கதையை எழுதியுள்ளனர். இந்த யட்சனின் மைய கரு ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்து ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றது.

  Vishnuvardhan speaks on Yatchan

  படத்தை பற்றி விஷ்ணு வரதன் பேசும் போது, "ஆரம்பம் படத்துக்கு முன்னரே இந்த படம் உருவாக வேண்டியது. எழுத்தாளர்கள் சுரேஷ் பாலாஜி அவர்கள் விகடன் வாரஇதழில் எழுதி வரும் கதைக்கு என்னுடைய பெயரை உபயோகப்படுத்த அனுமதி கேட்டார்கள். நான் அதற்க்கு பச்சை கொடி காட்டிவிட்டு, கதையின் கருவை கேட்டேன். எனக்கு அது மிகவும் பிடித்து போய் நிச்சயம் இந்த கதையை படமாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.

  கதையைப் படமாக்க முடிவு செய்தவுடன் திரை கதையை மிக நுணுக்கமாக கையாண்டு அதை முற்றிலும் புதிய கோணத்தில் உருவாக்க முடிவு செய்தோம். இது முற்றிலும் ஆக்ஷ்ன் காமெடி படமாக உருவாகியுள்ளது. கதைப்படி நாயகன் ஆர்யா 'சின்னா' என்னும் கதாபத்திரத்தில் தூத்துக்குடிகாரராக நடித்துள்ளார். அவர் ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு சென்னைக்கு வருபவராக நடித்துள்ளார்.

  இன்னொரு நாயகனான கிருஷ்ணா 'கார்த்தி' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி கார்த்திக்கு சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பது லட்சியம். வீட்டுக்கு பயந்த கிருஷ்ணாவை நாயகி சுவாதி மிரட்டி கோடம்பாக்கத்துக்கு கூட்டி செல்வார். சென்னைக்கு வந்த பின் தீபா சன்னிதியின் கதாபாத்திரம் அவர்கள் இருவரின் வாழ்க்கையில் மிகபெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அதன் பின் மாறி மாறி மூன்று நாட்கள் என்ன நடக்கின்றது என்பதை மிகவும் சுவாரசியமாக நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறோம்.

  இந்த கதையை ஏற்கனவே படித்தவர்கள் கூட படமாகப் பார்க்கும் போது ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு படம் புதுமையாக வந்துள்ளது. இது நான் கிருஷ்ணாவுடன் முதல் முறையும், ஆர்யாவுடன் ஐந்தாவது முறையும் இணையும் படம். நான் இயக்கிய டபுள் ஹீரோ கதைகள் அனைத்திலும் ஆர்யா நடித்துள்ளார்.

  ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திலும் அவரை அப்படி தான் காட்டியுள்ளேன். படத்தில் தீபா சன்னிதியின் கதாபாத்திரத்தை நடக்கவிருக்கும் விஷயங்களை முன்னேரே சொல்லும் ஆற்றல் படைத்தவராக உருவாக்கப்பட்டுள்ளது.

  வழக்கமாக நான் படத்தின் உருவாக்கத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வேன். இந்தப் படத்திலும் அதைப் போலவே நிறைய உழைத்துள்ளேன். படத்தில் ஆர்யா வரும் காட்சிகள் அனைத்தும் சிகப்பு நிற டோனிலும், கிருஷ்ணா வரும் காட்சிகள் அனைத்தும் நீல நிற டோனிலும் வரும். கண்டிப்பாக அது ரசிகர்களின் கவனத்தைச் சிதைக்காது. படம் பார்க்கும்போது எல்லோரும் நிச்சயம் சந்தோஷமாக பார்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

  யட்சனை வேறு எந்த மொழிகளிலும் வெளியிட போவதில்லை. அதற்க்கு காரணம் படத்தை நாங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிட உள்ளோம்.

  யட்சன் திரைப்படம் வருகிற 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது," என்றார்.

  English summary
  Vishnuvardhan's Yatchan is a double hero movie that will hit screens on Sep 11th worldwide.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X