»   »  விஸ்வரூபம் vs காஷ்மோரா:கமலுடன் நேரடியாக மோதும் கார்த்தி!

விஸ்வரூபம் vs காஷ்மோரா:கமலுடன் நேரடியாக மோதும் கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி ரேஸில் கமலின் விஸ்வரூபம் 2 வுடன், கார்த்தியின் காஷ்மோரா மோதவிருக்கிறது.

கார்த்தி நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.


Vishwaroopam 2 Clash with Karthi's Kashmora

சுமார் 45 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்தி 4 விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்.


கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உட்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை, தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


விஸ்வரூபத்தைத் தொடர்ந்து தான் இயக்கி, நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக கமல் அறிவித்திருக்கிறார்.


கமலுடன் இணைந்து பூஜா குமார், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். விஸ்வரூபம் வெற்றியால் அதன் 2 வது பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்நிலையில் இவ்விரு படங்களும் தீபாவளி ரேஸில் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. இதன் மூலம் கமல், கார்த்தி இருவரும் முதன்முறையாக நேருக்கு நேர் மோதிக்கொள்ளவுள்ளனர்.


கமல் நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான தூங்காவனம், அஜீத்தின் வேதாளத்துடன் மோதி பாக்ஸ் ஆபீஸில் பலத்த தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Kamal Haasan's Vishwaroopam 2 Clash with Karthi's Kashmora on Diwali Battle.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil