»   »  ரஜினியின் அடுத்த ஜோடி தீபிகாவா... வித்யாபாலனா?

ரஜினியின் அடுத்த ஜோடி தீபிகாவா... வித்யாபாலனா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

2.ஓ வுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க மும்பை ஹீரோயின்களுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய வெற்றிப் படமான கபாலிக்குப் பிறகு ரஜினிகாந்த் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் உலக அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் வியாபாரம் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Vishya or Deepika? Who is Rajinikanth's pair?

அடுத்து கபாலி இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் பற்றி ஆளாளுக்கு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

பாலிவுட் நாயகிகளான தீபிகா படுகோன், வித்யா பாலன் ஆகியோரிடம் பேசப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.

ரஜினியுடன் நடிக்க வித்யாபாலன் ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறார். தீபிகா படுகோன் ஏற்கெனவே கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார்.

English summary
Who will be the pair of Superstar Rajinikanth? Deepika or Vidhya Balan? Here is a report.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil