twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புஷ்பா கந்தசாமி தவறு செய்து வருகிறார்...விசு குற்றச்சாட்டு

    |

    சென்னை : நடிகர் ,எழுத்தாளர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பண்முகங்களை கொண்டவர் விசு .தற்சமயம் எழுத்தாளர்கள் சங்க தலைவராக இவர் செயல் பட்டு வருகிறார் .இதே நேரத்தில் இவர் கதை சரியான உரிமையின்றி படமாக்கபடுவதை வன்மையாக எதிர்த்தும் வருகிறார் .விசு சமீபத்தில் இனையத்தின் வாயிலாக சிலர் மேல் குற்றச்சாட்டையும் நடிகர் தனுசுக்கு சில கேள்விகளையும் கொடுத்துள்ளார் .

    நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் உட்ச நடிகராக வளர்ந்து மிகவும் பிஸியாக இருக்கிறார்.தனுஷ் 1981 ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்த நெற்றிக்கண் படத்தை மீண்டும் இயக்க போவதாக ஒரு தகவல் வெளியானது இது தொடர்பாக தான் சில கேள்விகளை எழுப்பியுள்ளார் விசு .நெற்றிக்கண் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார் இந்த படத்திற்கு கதை ,திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் விசு.இந்த படத்தை நடிகர் தனுஷ் தற்போது எடுக்க போவது என்றால் கட்டாயம் கவிதாலயா தயாரிப்பில் நீங்கள் உரிமம் பெற்றிருப்பீர்கள் அந்த படத்தின் கதாசிரியராக பணிபுரிந்த என்னிடம் நீங்கள் எதுவும் கேட்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார் .மேலும் இந்த தகவல் பொய் என்றால் கண்டு கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் .

    Visu questions dhanush about netrikann

    சினிமா துறையில் ஒரு வழக்கம் இருக்கிறது .ஒரு படத்தை வேறு மொழியில் எடுப்பதற்கோ அல்லது திரும்பவும் எடுப்பதற்கோ அந்த படம் எடுத்த தயாரிப்பாளர் மட்டுமின்றி அந்த படத்தின் எழுத்தாளரிடமும் உரிமை பெற வேண்டும் .ஆனால் தற்சமயம் தயாரிப்பாளர்களே உரிமை எடுத்து கொண்டு கதைகளை விற்றுவிடுவதாக விசு குற்றம் சாட்டினார் .

    சொல்லி அடிச்ச சூர்யா.. நடுவானில் ரிலீஸான வெய்யோன் சில்லி.. வேற லெவல் புரொமோ வீடியோ! சொல்லி அடிச்ச சூர்யா.. நடுவானில் ரிலீஸான வெய்யோன் சில்லி.. வேற லெவல் புரொமோ வீடியோ!

    இதே போல் தற்போது கவிதாலயா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் புஷ்பா கந்தசாமி இதை தொடர்ந்து செய்து வருவதாகவும் இதனால் நான் 7 வருடமாக தில்லு முல்லு படத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வருவதாகவும் வருத்ததுடன் தெரிவித்தார் .

    Visu questions dhanush about netrikann
    தற்போது தனுஷ் நெற்றிக்கண் படத்தை எடுக்க போவது உண்மை என்றால் அந்த படம் தயாரித்த கவிதாலயாவிடம் உரிமம் வாங்குவதை விட என்னிடம் வந்து கேட்பதே சரியாக இருக்கும் இல்லையெனில் நீதிக்காக மீண்டும் நான் நீதிமன்றம் ஏற தயார் என விசு கூறியுள்ளார் .

    மேலும் தனுஷ் முதல்முதலில் எடுத்த பவர் பாண்டி படத்தின் ராஜ்கிரன் கதாபாத்திரம் விசுவின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தின் நேரடி சாயல் என்றும் இதை தனுஷ் அப்பாவான கஸ்தூரி ராஜாவே ஒப்புக்கொண்டதை பற்றியும் விசு கூறியுள்ளார் .

    விசு மொத்தமாக கூற வருவது படம் ரீமேக் செய்வர்களிடம் காசு எல்லாம் எதிர்பார்க்கவில்லை ஆனால் சரியான முறையில் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அதை செய்ய தவறியவராக தனுஷ் இருந்து விட கூடாது என்றும் தெரிவித்து கொண்டார் .மேலும் கவிதாலயா தலைமை பொறுப்பில் இருக்கும் பாலசந்தர் மகளான புஷ்பா கந்தசாமி தொடர்ந்து சரியான முறையில் எழுத்தாளர்களை ஆலோசிக்காமல் தொடர்ந்து தனது இஸ்டம் போல கதைகளை விற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்

    English summary
    actor, writer and director visu is very famous for his family drama and movies related family emotions. recently he has been raising lots and lots of questions to actor danush and pushpa kandhasamy regarding the copy right issues of stories and its recognition .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X