»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

அரட்டை அரங்கத்தில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என நடிகர் விசு,நாமக்கல்லில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்த் திரையுலகில், மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் உட்பட பல்வேறு குடும்பத்திரைப் படங்கள் உட்பட பல வித்தியசமான படைப்புகளின் தயாரிப்பாளராகவும்,சிறந்த கதை ஆசிரியராகவும் திறம்பட செயல்பட்டவர் விசு.

இவரது தயாரிப்பான அரட்டை அரங்கம், சன் டி.வியில் தொடர்ந்து ஒளிபரப்பாகிவருகிறது. இதுவரை 360 அரட்டை அரங்கங்கள் ஒளிபரப்பாகியுள்ளது . இந்தஅரட்டை அரங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் விசு, 90-க்கும் மேற்பட்டநகரங்களில் இவற்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதிலும் மட்டுமல்லாது, சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்றநாடுகளிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். 7 ஆண்டுகள் நடந்து வரும் இந்தநிகழ்ச்சியில், 3 முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளதாக நாமக்கல்லில் "இன்றையசமுதாய சீர் கேட்டிற்கு காரணம் யார்? என்ற தலைப்பில் நடந்த அரட்டைஅரங்கத்தின்போது நடிகர் விசு தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஞாயிற்றுக்கிழமை நடக்கும்நடத்தப்போகும் அரட்டை அரங்கத்தில் 3 பெரும் மாற்றங்களைச் செய்துள்ளேன்.இதுவரை இருந்து வந்த அரட்டை அரங்கங்களின்படி, அந்த ஊர்களில் நடக்கும்நிகழ்ச்சியில், உள்ளூர் பிரமுகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தோம்.

இதில் நடுவராகப் பங்கேற்கும் பலர், பல்வேறு வகைகளில் தங்களது செல்வாக்கைப்பயன்படுத்தி உள்ளே நுழைந்து விடுகின்றனர். இதனால் திறமையானவர்களுக்குவாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. எனவே, நடுவர்களைத் தேர்வு செய்யும்பொறுப்பு மாறுகிறது. இதில் திறமையானவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் 18 பேர்கள், 3 அணிகளாகப் பிரிக்கப்படுகின்றனர். இந்தஅணிகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அந்தந்தஅணியினருக்கே வழங்கப்படும். இதில் திறமையற்ற பலர் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே, இதனை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்து, இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி மனவளர்ச்சி குன்றியகுழந்தைகளின் அமைப்பிற்கு அளிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை கண்டு களிக்கும் 108நாடுகளைச் சேர்ந்த அயல்நாட்டு இந்தியர்கள் இதற்கு நிதி அளிப்பார்கள் எனஎதிர்பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி 7 ஆண்டுகளாகி விட்டன. இதுவரை 90 நகரங்களில் 360நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற நாடுகளில்நிகழ்ச்சியை நடத்தும் போது எவ்விதப் பிரச்னையும் எழவில்லை. ஆனால் மத்தியகிழக்கு நாடுகளில் பங்கேற்றபோது அங்கு "ஸ்கிரிப்ட் தரும்படி கேட்டனர். இதனால்,பிரச்னை ஏற்பட்டது என்றார் விசு.

Read more about: arattai arangam, sun tv, tamilnadu, visu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil