»   »  'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல்ஹாசன்!

'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல்ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகியது. இதனை கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார.

பெரும் சிக்கலுக்கிடையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது விஸ்வரூபம் படம். இந்தப் படத்தை எடுக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகள் 40 சதவீதத்தை எடுத்துவிட்டார் கமல்.


Viswaroopam 2 first look poster released

விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு கணிசமான விலைக்கும் விற்றுவிட்டார். ஆனால் படம் மீதியுள்ள காட்சிகளை எடுக்க மேற்கொண்டு கமல் பணம் கேட்டதால், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தர மறுத்தார். இதைத் தொடர்ந்து படம் கிடப்பில் போடப்பட்டது.


அதன் பிறகு கமல் நடித்த 'உத்தம வில்லன்', 'பாபநாசம்' 'தூங்காவனம்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகி, நான்காவது படமான சபாஷ் நாயுடு தொடங்கப்பட்டது. இருப்பினும் கமல் நடிப்பில் உருவான 'விஸ்வரூபம் 2' வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்தது.


இந்நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து கமலே கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் 'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது என்று கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.


அதன்படி ' 'விஸ்வரூபம் 2' படத்தின் தமிழ் போஸ்டர்கள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகியுள்ளது. அதில் தேசிய கொடியை கமல் தனது உடம்பில் போர்த்தியபடி உள்ளது. படத்தின் மற்ற பணிகளையும் இன்னும் இரு மாதங்களுக்குள் முடித்துவிட்டு, அக்டோபரில் படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளாராம் கமல் ஹாஸன்.English summary
Vishwaroopam 2 Tamil, Telugu 1st look posters released today

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil