»   »  'விஸ்வரூபம் விவகாரம்...சமரசத்தை ஏற்பதும் மறுப்பதும் இந்திய போட்டிகள் ஆணையத்தின் விருப்பம்தான்!'

'விஸ்வரூபம் விவகாரம்...சமரசத்தை ஏற்பதும் மறுப்பதும் இந்திய போட்டிகள் ஆணையத்தின் விருப்பம்தான்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஸ்வரூபம் படம் விவகாரம் தொடர்பான பிரச்சினையில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்டுள்ள சமரசத்தை ஏற்றுக் கொள்வதும், ஏற்காததும் இந்திய போட்டிகள் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.

Viswaroopam: Film Exhibitors Told to Approach Competition Panel

கமல் ஹாஸன் தயாரித்து இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச்.சில் வெளியிடப் போவதாக அறிவித்தார். உடனே தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விஸ்வரூபம் படத்தை தங்களது திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்று தீர்மானம் இயற்றியது.

இதையடுத்து, இந்திய போட்டிகள் (வர்த்தக) ஆணையத்தில், ராஜ்கமல் நிறுவனம் புகார் மனு அளித்தது. அதில், தங்களது விஸ்வரூபம் படத்தை வெளியிட விடாமல் தடுக்கும் விதமாகவும், நியாயமற்ற முறையிலும் தங்களுக்கு எதிராக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் இயற்றியுள்ளதாகவும், இதனால் தங்களது நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், இந்திய போட்டிகள் (வர்த்தக) ஆணையத்தின் இயக்குனர் ஜெனரல் விசாரணையைத் தொடங்கினார். இதையடுத்து, தமிழ்நாடு திரைப்படங்கள் திரையிடுவோர் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், எங்களது புகார் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் கேட்டிருந்தனர்.

இதற்கு ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், இரண்டு சங்கங்களும் ஒரே நிர்வாகிகளை கொண்டு செயல்படும் சங்கங்கள்தான் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, தமிழ்நாடு திரைப்படங்கள் திரையிடுவோர் சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருக்கும்போது, ராஜ்கமல் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு திரைப்படங்கள் திரையிடுவோர் சங்கத்துக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு திரைப்படங்கள் திரையிடுவோர் சங்கம் ஒரு மனு தாக்கல் செய்தது.

அதில், ராஜ்கமல் நிறுவனத்துடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால், எங்கள் சங்கத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இந்திய போட்டிகள் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், "மனுதாரர், எதிர்மனுதாரர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள சமரசத்தை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் இந்திய போட்டிகள் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது ஆகும். ஒருவேளை இந்த சமரசத்தை ஏற்றுக்கொண்டால், இருதரப்பினரும் சமரச உடன்படிக்கையை மனுவாக, இந்திய போட்டிகள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த சமரச உடன்படிக்கை மனுவை பெயரளவில் ஏற்றுக்கொள்ளாமல், உரிய வழிமுறைகளை வகுத்து, அதனடிப்படையில் இந்திய போட்டிகள் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வழக்குகளை முடித்து வைக்கிறோம்," என்றனர்.

English summary
Despite being a box-office hit, Kamal Hassan's 'Viswaroopam' continues to haunt theatre owners. The ongoing war between the exhibitors and the veteran actor took a new turn with Madras High Court permitting TN Film Exhibitors Association to file its memorandum of compromise with Raaj Kamal Film International over the film before the Competition Commission.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil