twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைரமுத்துவை ஒதுக்கியதா ஜெயா டிவி?: விஸ்வரூப சர்சைகள்

    By Mayura Akilan
    |

    கமல் படத்தின் பெயரைப் போலவே படத்தைச் சுற்றிலும் விஸ்வரூப சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பாடல் வெளியீடு தொடங்கி, டிடிஎச் ஒளிபரப்பு, தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் என விஸ்வரூபம் படத்திற்கு சிக்கல்கள் மாறி மாறி எழுந்து கொண்டிருக்கின்றன.

    மாறிய தேதிகள்

    மாறிய தேதிகள்

    கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் விஸ்வரூபம். ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, முதலில் நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 7ம் தேதி மதுரை,கோவை, சென்னை ஆகிய மூன்று இடங்களில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

    சென்னையில் இளையராஜா

    சென்னையில் இளையராஜா

    மதுரை, கோவை ஆகிய இடங்களில் கமலின் ரசிகர்கள் இசைத்தகட்டினை பெற்றுக்கொண்டனர். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் முன்னிலையில் இசைத்தகட்டினை இசைஞானி இளையராஜா பெற்றுக்கொண்டார்.

    வைரமுத்து வரலையே

    வைரமுத்து வரலையே

    பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள், பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, தரணி ஆகியோரும், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ள வைரமுத்து மட்டும் இந்நிகழ்ச்சிக்கு வரவில்லை. வைரமுத்து கருணாநிதிக்கு ஆதரவான கருத்துடையவர். எனவே இந்நிகழ்ச்சியில் வைரமுத்து கலந்துகொள்ளக்கூடாது என முதல்வர் தரப்பிலிருந்து கமலுக்கு சொல்லப்பட்டாதாக தெரிகிறது. அதனால்தான் அவரை நிகழ்ச்சிக்கு அழைக்காமல் தவிர்த்து விட்டனராம்.

    கமல் சிறந்த வியாபாரி

    கமல் சிறந்த வியாபாரி

    கமல் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தி அதை வைத்து விளம்பரமும் வியாபாரமும் செய்து விடுவார். விருமாண்டி தொடங்கி விஸ்வரூபம் வரை இந்த வியாபாரத் தந்திரம் நீடிக்கிறது. இப்பொழுது டிடிஎச் மூலம் வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து பைசா செலவில்லாமல் சேனல்களில் விவாதங்களும், இதன் மூலம் விளம்பரமும் விஸ்வரூபம் படத்திற்குக் கிடைத்துள்ளது.

    சேனல்களின் போட்டி

    சேனல்களின் போட்டி

    இதேபோல் விஸ்வரூபம் படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்குவதில் ஜெயா டிவி, விஜய் டிவி இடையே போட்டி நிலவியதாகவும், விஜய் டிவியை விட இரண்டு மடங்கு காசு கொடுத்ததால்தான் விஸ்வரூபம் ஜெயா டிவியின் கையில் ஒப்படைக்கப்பட்டதாம். அதனால் தான் முதலமைச்சரை கமல் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

    மன்மதன் அம்பு, துப்பாக்கி

    மன்மதன் அம்பு, துப்பாக்கி

    கமல் நடித்த மன்மத அம்பு படத்தை விஜய் தொலைக்காட்சி தான் வாங்கியது. அதைத்தொடர்ந்து விஜய் நடித்த துப்பாக்கி படத்தை வாங்குவதில் விஜய் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையே போட்டி ஏற்பட்டு கடைசியாக விஜய் டிவி துப்பாக்கியை வாங்கியது. அதேபோல் விஸ்வரூபம் படத்தை வாங்குவதிலும் இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் ஜெயா டிவி வெற்றி பெற்றுள்ளது.

    English summary
    Jaya TV seems to be on a roll. After bagging the satellite rights of Kamal’s movie Viswaroopam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X