»   »  விசுவாசம் ஹீரோயின் யார் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விசுவாசம் ஹீரோயின் யார் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அஜித் நடிப்பில் மீண்டும் நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகவிருக்கும் திரைப்படம் 'விசுவாசம்'.

இப்படத்தின் கதை விவாத பணிகள் முடிவை எட்டியிருக்கும் சூழலில் வருகிற பிப்ரவரி 22-ம் தேதி படப்பிடப்பிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விசுவாசம் படத்தின் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் பரவலாக பேசப்பட்டன. ஆனால் சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ தகவல்படி நயன்தாரா கமிட்டாகியுள்ளார்.

விசுவாசம்

விசுவாசம்

அஜித் - சிவா கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள படம் 'விசுவாசம்'. விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி நாட்களாகிவிட்ட நிலையில் ஜனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்கள்.

ஷூட்டிங் தாமதம்

ஷூட்டிங் தாமதம்

ஆனால் படம் திட்டமிட்டபடி ஆரம்பமாகவில்லை. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற தேர்வுகள் நடந்து வந்தன. அதேசமயம், படத்திற்கான உருவாக்கத்திற்கான எழுத்துப் பணிகளும் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

ஹீரோயின் நயன்தாரா

ஹீரோயின் நயன்தாரா

இந்நிலையில் படத்திற்கான ஹீரோயின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். வருகிற மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நயன் தாரா

நயன் தாரா

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா 'விசுவாசம்' ஹீரோயினானது அஜித்திற்கு மேலும் பக்கபலமாய் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்த ஜோடி, 'பில்லா', 'ஏகன்', 'ஆரம்பம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளது.

நான்காவது முறையாக

நான்காவது முறையாக

இப்போது நான்காவது முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளது. இந்த சூப்பர்ஹிட் ஜோடி மீண்டும் 'விசுவாசம்' படத்தின் மூலம் இணைந்திருப்பதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

English summary
Lady superstar Nayanthara to act with Ajith in 'Viswasam' movie. Sathyajyoti films officially announced Nayanthara as 'Viswasam' heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil