»   »  அஜித்தின் விசுவாசம் பற்றிய ஆச்சர்ய அப்டேட்ஸ்!

அஜித்தின் விசுவாசம் பற்றிய ஆச்சர்ய அப்டேட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்தின் விசுவாசம் ஆச்சர்ய அப்டேட்ஸ்!

சென்னை : அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கவுள்ளது.

இந்தப் படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் இரண்டு மிகப்பெரிய ஸ்டூடியோக்களில் செட் போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படததைப் பற்றிய சர்ப்ரைஸ் செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித் 58

அஜித் 58

அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது.

சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

'அஜித் 58' படத்தின் பெரும்பாலான பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளது. இதே ஸ்டூடியோவில்தான் 'வீரம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அரை மணிநேர பிளாஷ்பேக்

அரை மணிநேர பிளாஷ்பேக்

வீரம், வேதாளம் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரு நல்ல வலுவான பிளாஷ்பேக் காட்சிகள் இருந்தன. அதைபோல் அரைமணி நேர பிளாஷ்பேக் இந்த படத்திலும் இருப்பதாகவும், இதுதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கார் சேஸிங் காட்சி

கார் சேஸிங் காட்சி

வீரம் படத்தில் ரயில் ஸ்டன்ட் காட்சிகளும், விவேகம் படத்தில் பைக் சேசிங் காட்சிகளும் தனித்துவமாக இருந்தது. அந்த வகையில் விசுவாசம் படத்தில் கார் சேசிங் காட்சிகள் இருக்கும். இந்த சண்டைக்காட்சிக்காக வெளிநாட்டு கார் சேசிங் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

English summary
Ajith's 'Viswasam' shooting will be started soon. Few surprise updates are there to ajith fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil