»   »  'விசுவாசம்' டீசர் நாளை ரிலீஸ்? வைரலாகும் போஸ்டர்!

'விசுவாசம்' டீசர் நாளை ரிலீஸ்? வைரலாகும் போஸ்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியீடு..??

மதுரை : அஜித்தின் 58-வது படமான 'விசுவாசம்' சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிறது. அஜித்தும் சிவாவும் இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைகிறார்கள்.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரசிகர்கள் பலரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யார் எனத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், படத்தின் டீசருடன், இசையமைப்பாளர் யார் எனும் விபரமும் நாளை வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது.

விசுவாசம்

விசுவாசம்

அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைக்கிறார். படத்தின் டைட்டில் 'விசுவாசம்' என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #Viswasam ட்ரெண்ட் ஆனது. பட டைட்டிலை தாண்டி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

யார் இசையமைப்பாளர்

யார் இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 'விசுவாசம்' படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் ரசிகர்கள் சமீபத்தில் எங்களுக்கு விசுவாசம் பட அடுத்த தகவல் வேண்டும் என்ற ஹேஸ்டேக்கை கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்தனர்.

நாளை டீசர்?

நாளை டீசர்?

இந்நிலையில் தற்போது நாளை இசையமைப்பாளர் யார் என்பதை டீசர் ஒன்றின் மூலமாக அறிவிக்க உள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. மேலும், யார் எனக் கண்டுபிடியுங்கள் என புதிர் வைத்துள்ளனர். ஆனால், இந்தத் தகவல் உண்மை தானா என்பது தெரியவில்லை.

விசுவாசம் அப்டேட் தானா?

விசுவாசம் அப்டேட் தானா?

இப்படத்தின் இசை யார் என்பதை ஒரு டீசர் மூலம் நாளை வெளியிடவுள்ளதாக வந்த செய்தி அதிகாரப்பூர்வமானது இல்லை. இது விசுவாசம் அப்டேட் தானா.. இல்லை வேறு படத்தின் ப்ரோமோஷனா என்பது வெகுவிரைவில் தெரிந்துவிடும்.

English summary
Ajith and Siva join the film for the fourth time by 'Viswasam'. Many of the fans are eagerly waiting to know who is the music composer of 'Viswasam'. In this case, the poster of the film released, that carries the teaser of the film will be released tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X