»   »  உலகமே எதிர்த்தாலும்... சாதனை படைத்தது விவேகம் டீஸர்!

உலகமே எதிர்த்தாலும்... சாதனை படைத்தது விவேகம் டீஸர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தாலும் 'பாகுபலி 2' படம் செய்த சாதனைகளையும் முறியடித்து வருகிறது. 4 வார முடிவில் படம் ரூபாய் 170 கோடி வசூலித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

இந்நிலையில், Star Wars பட சாதனையை முறியடித்து உலகளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீஸர் என்ற பெருமையை விவேகம் பட டீஸர் தற்போது பெற்றுள்ளது.

இந்த மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் பல ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

சில நாட்களுக்கு முன்னர், விவேகம் டீஸர் இன்னும் 17,000 லைக்குகள் பெற்றால் முதலிடத்தில் இருக்கும் ஸ்டார் வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி டீஸரை முந்தி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தெறிக்கவிட்ட ரசிகர்கள் :

தெறிக்கவிட்ட ரசிகர்கள் :

அஜித் ரசிகர்கள் 3 நாட்களுக்குள் அந்த 17,000 லைக்குகளை விவேகம் டீஸருக்கு அளித்து புதிய உலக சாதனையை அந்த டீஸர் படைக்க வைத்துள்ளனர். தற்போது ஸ்டார் வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி டீசர் 5,72,000 லைக்ஸ் பெற்ற நிலையில், விவேகம் டீஸர் 5,73,000 லைக்குகளை எட்டியிருக்கிறது.

இந்தியப் படம் :

இந்தியப் படம் :

உலகத் திரைப்பட வரலாற்றில், ஒரு படத்தின் டீஸரில், அதிக லைக்குகளைப் பெற்றுள்ள இந்தியப் படம் அதுவும் ஒரு தமிழ்ப் படம் என்கிற பெருமை அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

வ்யூவ்ஸ் :

வ்யூவ்ஸ் :

விவேகம் டீசருக்கு இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. ஆனால், ஸ்டார் வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி டீசருக்கு 39 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. அந்த விதத்தில் பார்த்தால் ஸ்டார் வார்ஸ் டீசரை விட பாதி அளவே கிடைத்துள்ள பார்வைகள் எண்ணிக்கையில் விவேகம் டீசர் அதிக லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

டிஸ்லைக்கும் அதிகம் :

டிஸ்லைக்கும் அதிகம் :

'Star wars' டீஸருக்கு 26,000+ டிஸ்லைக்குகள் கிடைத்திருக்கின்றன. விவேகம் டீஸருக்கு 81,000+ டிஸ்லைக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தல - மாஸ் :

தல - மாஸ் :

இதன்மூலம் உலகளவில் டீசரில் அதிக லைக்குகள் பெற்று சாதனை படைத்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் நடிகர் அஜித்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

English summary
'Vivegam' has a glimpse of being a highest liked teaser globally. 'Vivegam' Teaser has now reached 5,73,000 likes in you-tube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil