twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் சாதித்த விவேகம்!

    By Shankar
    |

    அஜித் குமார் - காஜல் அகர்வால், விவேக் ஓபராய் நடித்துள்ள படம் விவேகம். அனிருத் இசையில் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து ஆகஸ்ட் 24 அன்று ரீலீஸ் செய்தது. அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத படம் என விவேகம் பற்றி விமர்சனம் எழுந்தது. திரை விமர்சகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விவேகம் படத்தைக் கழுவி ஊற்றினார்கள்.

    ஆனால் இப்படிப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களே விவேகம் படத்தின் வசூல் மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடாமல் காப்பாற்றியிருக்கிறது. அஜித் குமார் படங்கள் சரியில்லை என்றால் இரண்டாவது காட்சிக்கே தியேட்டர் காலியாகிவிடும். குடும்பங்களோடு அஜித் படங்கள் பார்க்க வருபவர்கள் குறைவு. இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகரான அஜித் குமார் கதையில் கவனம் செலுத்தியிருந்தால் விவேகம் இவ்வாண்டின் விஸ்வரூப வெற்றிப் படமாகியிருக்கும் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

    Vivegam 4 days collection in Chennai

    போட்டிக்கு படங்கள் இல்லாததால் விவேகம் 71 திரைகளில் திரையிடப்பட்டது. படம் வெளியான மறுதினம் முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் முன்பதிவில் விவேகம் கல்லா கட்டியது. அப்படி ஒரு சூழல் இல்லை என்றால் விவேகம் சென்னை நகரில் 71 திரைகளில் தொடர்ந்து ஓடியிருக்க முடியாது. இப்படி ஒரு வசூல் ஆகியிருக்காது என்பதே திரைப்பட விநியோகஸ்தர்களின் கருத்தாக உள்ளது.

    கடந்த நான்கு நாட்களில் சென்னை நகரில் சுமார் 5 லட்சம் பேர் விவேகம் படம் பார்த்து உள்ளனர். இதன் மூலம் மொத்த வசூல் சுமார் 6 கோடியை நெருங்குகிறது. இதில் வரி, தியேட்டர் வாடகை, பிற செலவினங்கள் போக 2 கோடியே 88 லட்சம் ரூபாய் தயாரிப்பாளருக்கு கிடைக்கும்.

    அஜித் படங்களைப் பொறுத்தவரை இது அதிகபட்ச வசூல் எனலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகள் மற்றும் உலக அளவிலான வசூல் நிலவரம் விரைவில்.

    - ஏகலைவன்

    English summary
    Here is Ajith Kumar's Vivegam 4 day box office collection details
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X