»   »  விவேகம்... தவிக்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள்!

விவேகம்... தவிக்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா ஆர்வலர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'விவேகம்' நேற்று உலகம் எங்கும் ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் அதிக திரைகளில் வெளியான தமிழ் படம் என்ற பெருமைக்குரிய இடத்தை் 'விவேகம்' பெற்றது.

ஆம், 550 திரைக்கு மேல் ஒரு தமிழ் படம் இதுவரை ரீலீஸ் ஆனது இல்லை. போட்டிக்கு படம் இல்லை. 119 கோடி பட்ஜெட், 124 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது விவேகம். இந்தி வட்டாரத்துக்கு விவேக் ஓபராய், கமலஹாசன் மகள் அக்க்ஷரா ஹாசன் என பெரிய நடிகர்கள் பட்டாளம். ஓபனிங் கொடுக்க அஜித் ரசிகர் பட்டாளம் எல்லாம் இருந்தது. ரஜினி, விஜய் படங்களை விட சற்று பெரிய ஓபனிங் இருந்ததையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.


Vivegam distributors in fear

எல்லாம் காலைக் காட்சி முடிந்து வெளியில் வரும்வரைதான். வெளியில் வந்த பிறகு அவர்கள் அடித்த கமெண்ட், "இன்னுமா நம்ம தல சிவாவை நம்புறாரு... சொதப்பிட்டாரே சிவா!" என ஒரு ரசிகர் கமெண்ட் அடிக்க, இன்னொருவர் சென்னை பாஷையில் திட்டித் தீர்த்தார்.


விவேகம் தெறி மாஸ் என டிவிட்டரில் சிலர் ட்வீட்டிக் கொண்டிருக்க, தொலைக்காட்சிகள் விவேகம் ஓபனிங்கை தலைப்பு செய்திகளாக்கினார்கள். காலையில் 900 ம் பேர் பார்த்த தியேட்டரில், இரவுக் காட்சி நூற்றுச் சொச்சம் என்றாகிவிட்டது.


ஆனால் முன்பதிவு அதிகம் ஆன சென்னை, கோவை ஏரியாக்களில் அரங்கு நிறைந்த காட்சிகளே... இது அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும். இந்த ஏரியா விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் ஓரளவு தப்பிக்கும். பிற ஏரியாக்களில் இரவுக் காட்சியே டல்லடித்துள்ளதாக தியேட்டர்களின் டிசிஆர் (Daily Collection Report) தெரிவிக்கிறது.


என்ன காரணம் என விசாரித்த போது, "சார்... கதை கேட்டுட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் குறைந்துவிட்டனர். ஹீரோ டேட்டோடு யார் வந்தாலும் தயாரிக்க ரெடி என்பதுதான் தயாரிப்பாளர் நிலை. அதன் விளைவுதான் இந்த மாதிரி சொதப்புவது," என்கிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி.


"இந்த மாதிரி பெரிய படங்களுக்குள்ள ஆபத்து, முதல் காட்சி பார்த்துவிட்டுப் போகும் ரசிகர்கள் அடுத்தடுத்த காட்சிகளுக்கு வருபவர்களையும் வர விடாமல் செய்து விடுவதுதான்.. அதனால்தான் முதல்காட்சி ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய படத்துக்கு, அதே நாள் கடைசி காட்சிக்கு கால்வாசிப் பேர்கூட வராமல் போவது," என்றார் சென்னையின் பிரபல தியேட்டர் ஒன்றின் உரிமையாளர்.


அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள், எம்.ஜி அடிப்படையில் விவேகம் படம் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் பயத்தில் உள்ளனர். திங்கள்கிழமை அன்று படத்தின் முழுமையான விவரங்கள் வெளியாக உள்ளது

English summary
Vivegam distributors and theater owners are in fear due to the box office reports of the movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil