»   »  மானநஷ்ட வழக்கு போடுவேன்: செய்தி இணையதளம் மீது 'விவேகம்' எடிட்டர் கோபம்

மானநஷ்ட வழக்கு போடுவேன்: செய்தி இணையதளம் மீது 'விவேகம்' எடிட்டர் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் பெயரை இழுத்ததற்காக மான நஷ்ட வழக்கு போட முடியும் என்று விவேகம் பட எடிட்டர் ரூபன் கோபமாக ட்வீட்டியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் டீஸர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு இணையதளத்தில் லீக்கானது.


இதனால் தல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


ரூபன்

ரூபன்

டீஸர் லீக்கானதற்கு படத்தின் எடிட்டர் ரூபனின் உதவியாளர்களில் ஒருவர் தான் காரணம் என்று இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதை ரூபன் ட்விட்டரில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


பெயர்

உங்களுக்கு என் உதவியாளரின் பெயர் தெரியுமா? உங்கள் விளம்பரத்திற்காக தவறான செய்தியை பரப்பாதீர்கள். என் பெயரை இழுத்ததற்காக மான நஷ்ட வழக்கு போட முடியும் என ட்வீட்டியுள்ளார் ரூபன்.


சமூக வலைதளம்

சமூக வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் மீடியா மற்றும் வீடியோ சேனல்களை துவங்குகிறார்கள். எதையாவது போஸ்ட் பண்ணுவதற்கு முன்பு கொஞ்சம் யோசியுங்கள் என்று ரூபன் தெரிவித்துள்ளார்.


மன்னிப்பு

மன்னிப்பு

ரூபன் கோபமாக ட்வீட்டியதை பார்த்த அந்த இணையதளம் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இனியாவது எந்த செய்தியை வெளியிடும் முன்பு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்று அந்த இணையதளத்திற்கு ரூபன் அறிவுரை வழங்கியுள்ளார்.


English summary
Vivegam editor Reuben got angry after some website accused one of his assistant's of leaking Ajith starrer Vivegam teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil