»   »  ரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்த விவேகம்

ரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்த விவேகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் விவேகம் படம் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்த விவேகம் படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸானது.

Vivegam enters Rs. 100 crore club

விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக இருந்தது படத்திற்கு நல்லதாகிவிட்டது. விவேகம் சென்னையில் அதிவேகத்தில் ரூ. 6 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

விவேகம் ரிலீஸான 4 நாட்களில் உலக அளவில் ரூ. 106 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ. 69.50 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 36.50 கோடியும் வசூல் செய்துள்ளது.

விவேகம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ajith starrer Vivegam has collected Rs. 106 crore worldwide in four days of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil