»   »  மாப்பிள்ளை அஜீத் தான் ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை அவருடையது இல்லையா?

மாப்பிள்ளை அஜீத் தான் ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை அவருடையது இல்லையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்திற்காக அஜீத் கடினமாக உழைத்து தான் உடலை கும்மென்று ஆக்கியுள்ளார் என்று அவரை தினம் தினம் நேரில் பார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்திற்கு விவேகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்ப்பவர்களால் அதை மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியவில்லை. காரணம் அஜீத்தின் கும்மென்ற உடல்வாகு.

இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக மரண கொடூரமாக உடலை சிக்கென்று ஆக்கியுள்ளார்.

அஜீத்

அஜீத்

உடலை சிக்கென்று ஆக்குவது ஒரு பெரிய விஷயமா என்றால் அஜீத்துக்கு அது பெரிய விஷயம் தான். பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டுள்ள அவர் இப்படி கும்மென்று ஆகியுள்ளதை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

போட்டோஷாப்

போட்டோஷாப்

ஹாலிவுட் ஹீரோ யாருடைய புகைப்படத்தையோ எடுத்து அதில் அஜீத்தின் தலையை ஒட்ட வைத்து போட்டோஷாப் செய்துள்ளனர் என சிலர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.

ஃபிட்னஸ் டிரெய்னர்

ஃபிட்னஸ் டிரெய்னர்

அஜீத் சிக்ஸ் பேக் வைக்க உதவியவர் ஃபிட்னெஸ் டிரெய்னர் யூசுப். அஜீத் இந்த அளவுக்கு மாறியதற்கு அவருடன் சேர்ந்து பணியாற்றியதை கவுரவமாக கருதுவதாக யூசுப் தெரிவித்துள்ளார்.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

விவேகம் படத்தில் வில்லனாக நடித்து வரும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் அஜீத்தின் சிக்ஸ் பேக் பாடியை பார்த்து வியந்து புகழ்ந்து பேசியுள்ளார். பாலிவுட்டில் அவர் பார்க்காத சிக்ஸ் பேக்கா. இருப்பினும் அஜீத் கஷ்டப்பட்டு சிக்ஸ் பேக் வைத்ததை அவரால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    English summary
    Vivegam Ajith's six pack body has got the attention of his fans and celebs. Some are making fun of his body by calling it as a photoshop work.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil