»   »  விவேகம் படம் எப்படி? ஒரு ஷோ ஓடி முடியும் வரையாவது காத்திருங்கப்பா!

விவேகம் படம் எப்படி? ஒரு ஷோ ஓடி முடியும் வரையாவது காத்திருங்கப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம்... அதாவது ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என சமூக வலைத் தளங்களை மக்கள் அதிகம் பாவிக்காத வரையில் படம் வெளியாகி, ஒரு வாரம் அல்லது குறைந்தபட்சம் முதல் மூன்று நாட்கள் வரை எந்த விமர்சனமும் வெளியில் வராது. வெறும் வாய்வழிப் பேச்சுதான். அது படத்தின் ஓட்டத்தைப் பெரிதாக பாதிக்காது.

ஆனால் எப்போது இந்த சமூக வலைத் தளங்கள் அதிகம் பயன்பாட்டுக்கு வந்தனவோ, அப்போதே தமிழ் சினிமாவின் தலைக்கு மேல் கத்தியாக அவை மாறிவிட்டன.

Vivegam gets mixed reviews

படம் வெளியாகும் முன்பே விமர்சனங்கள் வெளியாகின்றன. அல்லது மீம்ஸ்கள் என்ற பெயரில் படங்களைக் கிழித்து தொங்கவிடுகிறார்கள். அதே படங்களை இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு 'அப்படி ஒண்ணும் மோசமில்ல போல' என உச்சுக் கொட்டுகிறார்கள்.

இப்போது அஜித்தின் விவேகம்...

இந்தப் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிக் கூட வெளியாகவில்லை. அதற்குள் விவேகம் விமர்சனம், விவேகம் மீம்ஸ், ஃபேஸ்புக்கில் எதிர்மறைப் பதிவுகள் வெளியாகிவிட்டன. அதிகாரப்பூர்வமாக காலை 11 மணிக்குத்தான் படம் வெளியாகும் என்ற நிலையில், படம் குறித்து பலரும் கண்டபடி பதிவுகளை வெளியிட்டும், அதை ஷேர் செய்யுமாறு கேட்டுக் கொண்டும் உள்ளனர்.

Vivegam gets mixed reviews

ஒருவர் விவேகம் தாறு மாறு.. அஜித் அசத்தியுள்ளார்.. படம் வேற லெவல் என ட்வீட் செய்ய, இன்னொருவர் அஜித்துக்கு ஒரு அஞ்சான் என பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற கலவையான விமர்சனங்கள்தான் பெரிய படங்களுக்கு எப்போதுமே எதிரி. விமர்சனங்களை, எதிர்க்கருத்துகளை யாரும் தடுக்க முடியாதுதான். அட அட்லீஸ்ட் படம் பரவலாக வெளியாகி ஒரு ஷோ ஓடி முடியும் வரையாவது காத்திருங்கப்பா!

English summary
Ajith's Vivegam is getting mixed reviews even before its offical release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil