twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்தின் விவேகம் - சாதிக்குமா?

    By Shankar
    |

    ஆகஸ்ட் 24 அஜித்குமார் அபிமானிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் 'விவேகம்' ரிலீஸ் ஆகிறது. திட்டமிட்டதைக் காட்டிலும் இப்படத்திற்கு கூடுதலாகச் செலவானதாகக் கூறப்படுகிறது. அஜித் குமார் இதுவரை நடித்த படங்களில் அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள விவேகம் படம் அதிக விலைக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமாக இருந்தாலும் 50 கோடிக்கு மேல் வருமானம் வராது என்பதை மாற்றிய முதல் படம் ரஜினிகாந்த் நடித்த எந்திரன். விஜய் நடித்த தெறி 50 கோடியை பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் நெருங்கியது. அஜித் நடித்த படங்கள் எதுவுமே 40 கோடியை நெருங்கியது இல்லை.

    Vivegam gets whooping price

    இந்த சூழலில் விவேகம படத்தை தமிழ்நாட்டில் தியேட்டரில் திரையிடும் உரிமை சுமார் 50 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளது. இத்தொகை அசலாகத் திரும்பக் கிடைக்க தமிழக திரையரங்குகளில் சுமார் 80 கோடியை பாக்ஸ் ஆபீஸ் வசூலாக விவேகம் பெறவேண்டும்.

    இதுவரை உலக அளவில் 100 கோடி ரூபாய் வருமானத்தை அஜித் குமார் நடித்த எந்தப் படமும் வசூலித்தது இல்லை.

    போட்டிக்கு படமில்லை, முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அஜீத் - சிவா இணைந்துள்ள மூன்றாவது படம். கமல்ஹாசன் மகள் அக்சரா ஹாசன், காஜல் அகர்வால், இந்தி நடிகர் விவேக் ஓபராய் முதன் முறையாக அஜித் உடன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் அஜித் நடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது.

    சிறுத்தை சிவா ஏற்கனவே அஜீத் நடித்த வீரம், வேதாளம் படங்களை இயக்கியவர். இரண்டு படங்களும் விழா நாட்களில்ரீலீஸ் செய்யப்பட்டன. வசூல் ரீதியாக மிகப் பெரிய லாபத்தை இவ்விரண்டு படங்களும் பெற்று விடவில்லை. வீரம் படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை உண்டாக்கிய படம். வேதாளம் விநியோகஸ்தர், தியேட்டர்களுக்கு லாபத்தைக் கொடுத்த படம்.

    இதே கூட்டணி விவேகத்தில் இணைந்தும், படத்தின் தமிழ்நாடு உரிமையை அதிகபட்ச விலைக்கு நம்பிக்கையோடு வாங்கியுள்ள விநியோகஸ்தர்களுக்கு விவேகம் வெற்றியை தருமா என்பதே வியாபார வட்டாரங்களின் கேள்வி.

    தமிழ்நாடு 9 விநியோக பகுதிகளின் வியாபார விபரம்:

    சென்னை நகரம் - விநியோகம் - ஜாஸ்

    செங்கல்பட்டு - 10.60 கோடி

    கோவை ஏரியா - 8.50 கோடி

    சேலம் ஏரியா .... 5. 50 கோடி

    மதுரை ஏரியா.... 6.50கோடி

    திருச்சி ஏரியா.... 6 கோடி

    வேலூர்ஏரியா..... 3.50 கோடி

    பாண்டி ஏரியா...... 4 கோடி

    - ஏகலைவன்

    English summary
    Ajith Kumar's Vivegam has gone for a whopping price Rs 50 cr in Tamil Nadu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X