»   »  விவேகம் என் கதை, சுட்டுட்டாங்க: தயாரிப்பாளர் பரபர புகார்

விவேகம் என் கதை, சுட்டுட்டாங்க: தயாரிப்பாளர் பரபர புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தின் கதை என்னுடையது என்று தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த விவேகம் படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸானது. படம் குறித்து சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனம் பரப்பப்பட்டது.

Vivegam is my story: Says a producer

இந்நிலையில் ரவீந்தர் சந்திரசேகரன் என்பவர் விவேகம் தன் கதை என்று இன்று ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அஜீத்துக்கு நெருக்கமான உதவியாளரிடம் கதையை சொன்னதாகவும், அதன் பிறகு கதை திருடப்பட்டதாகவும் கூறுகிறார் ரவிந்தர்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது,

புதுமுகங்களுடன் படம் பண்ண மாட்டார் அஜீத் என்று அவரின் உதவியாளர் தெரிவித்தார். கதை திருட்டுக்கும் சிவா, அஜீத் சாருக்கும் தொடர்பு இல்லை. அஜீத் சாரின் உதவியாளரின் வேலை இது.

நான் இதை விளம்பரத்திற்காக தெரிவிக்கவில்லை. அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 3 படங்களை தயாரித்த எனக்கே இப்படி துரோகம் செய்கிறார்கள் என்றால் சாதாரண மனிதர்களின் நிலையை சொல்லவா வேண்டும்.

விவேகம் படத்தின் கதை என் படமான ஐ- நாவின் கதை. அதை நான் 2013ம் ஆண்டிலேயே டிசைன் செய்துவிட்டேன். பட வேலைகளை அடுத்த ஆண்டு துவங்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
A producer named Ravindar Chandrasekaran has posted in Facebook that Vivegam story is his content.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil