»   »  பெரும் விலைக்குப் போன விவேகம் கேரள உரிமை... புலிமுருகன் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்!

பெரும் விலைக்குப் போன விவேகம் கேரள உரிமை... புலிமுருகன் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித்ஜின் 57வது படமான 'விவேகம்' கேரள விநியோக உரிமையை புலிமுருகன் தயாரித்த முலகுப்படம் பிலிம்ஸ் பெரும் விலைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் 'விவேகம்' படத்தின் விநியோக உரிமை விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.

தமிழகத்தின் பெரும்பான்மை ஏரியாக்கள் விற்கப்பட்டுவிட்டன. மற்ற மாநில உரிமைகளுக்கும் ஏகப் போட்டி நிலவுகிறது.

கேரள உரிமை

கேரள உரிமை

இப்படத்தின் கேரள உரிமையைப் பெரும் விலைகொடுத்து வாங்கியுள்ளது முலக்குப்படம் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் தான் சமீபத்தில் பெரும் வசூல் சாதனை புரிந்த 'புலிமுருகன்' படத்தை தயாரித்தது. விவேகம் படம் மூலம் பெரும் வசூல் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.

போட்டி

போட்டி

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' படம் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்தது. இதனால், 'விவேகம்' படத்துக்கு தமிழக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. சென்னை உரிமையை ஜாஸ் சினிமாஸ் வாங்கியுள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட 'சர்வைவா' பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்

அடுத்த படம்

'விவேகம்' படத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அஜித் டப்பிங் பேச வேண்டியதுதான் பாக்கி. எனவே விரைவில் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது தெரிந்துவிடும்.

English summary
Ajith's Vivekam Kerala area was sold out for a whopping price.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil