»   »  விவேகம் வெளிநாடுகளில் கல்லா கட்டியதா?

விவேகம் வெளிநாடுகளில் கல்லா கட்டியதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக மக்களை பாதிக்கக் கூடிய பிரச்சினைகளை விட, நாடே கேலியாகுப் பார்க்கும் அளவுக்குப் போய்விட்ட அதிமுக உட்கட்சி விவகாரங்களை காட்டிலும், சமூக ஊடகங்களில்அதிகமாக விவாதிக்கப்பட்டது அஜித் குமார் நடிப்பில் கடந்த 24 அன்று ரீலீஸ் ஆன 'விவேகம்' திரைப்படம்தான் என்றால் மிகையல்ல.

படத்தின் வசூலை பற்றி அவரவர் வசதிக்கு தகவல்கள் பகிரப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து ரிலீஸ் ஆகும் ஒரு தமிழ் படத்திற்கு வியாபார ரீதியாக இந்த வசூல் சாத்தியமா என்பதைப் பற்றி எல்லாம் இங்கு எவருக்கும் கவலையில்லை.

விவேகம் படம் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள், அதற்கு உடனடி பதில் நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் கடந்த நான்கு நாட்களாக இது திட்டமிட்டு நடத்தப்பட்டது. குறிப்பிட்ட சிலர் ஓரிடத்தில் இருந்து அதனை செய்திருக்கிறார்கள் என்பதை பதிவை தொடர்ந்து படித்து வருபவர்களால் அறிய முடிந்திருக்கிறது. படத்துக்காக உருவாக்கப்படும் போலித்தனமான பிம்பங்களை விவேகம் உண்மை தகர்த்து தரைமட்டமாக்கியது நேற்றைய வசூல் நிலவரம்.

சென்னை வசூல்

சென்னை வசூல்

ஞாயிற்றுக்கிழமை சென்னை நகரில் விவேகம் மொத்த வசூல் 1 கோடி 48 லட்சம். ஆனால் அது திங்கட்கிழமை வெறும் 56 லட்சமாக அடிமட்டத்திற்கு குறைந்தது.

வெளிநாடுகளில் விவேகம் வசூல் என்ன? ஒவ்வொரு வெளிநாட்டு விநியோகஸ்தரிடமிருந்தும் நேரடியாகப் பெற்ற தகவலின் அடிப்படையில் தந்துள்ளோம்.

இலங்கை

இலங்கை

இலங்கை உரிமை விற்கப்பட்டது ரூ 1 .60 கோடிக்கு. இதுவரை ரூ 60 லட்சம்தான் வசூலாகியுள்ளது. மீதி ஒரு கோடியை இனி வரும் நாட்களில் எடுக்க முடியுமா என்பது விநியோகஸ்தர் முன் நிற்கும் விஸ்வரூப கேள்வி!

மலேசியா

மலேசியா

நான்கு கோடிக்கு மலேசிய உரிமையை வாங்கினார் விநியோகஸ்தர் ராமசாமி. இதுவரை ரூ 2.75 கோடி வரை வசூலாகியுள்ளது. இங்கு 700 திரைகளில் விவேகம் திரையிடப்பட்டது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் விவேகம் பிரீமியர் காட்சி வசூல் பிரமாதமாக இருந்தது. 100 திரைகளில் தெலுங்கு விவேகம் திரையிடப்பட்டு டிக்கட் விற்பனையாகாததால் காட்சிகள் குறைக்கப்பட்டு படம் தூக்கப்பட்டது. ரூ 2 கோடிக்கு வாங்கிய அமெரிக்க விநியோகஸ்தருக்கு அதில் பாதிதான் வசூலாகக் கிடைத்துள்ளது. ரூ 1 கோடி நஷ்டம் என்கிறார்.

- ஏகலைவன்

English summary
Here is the Box office details of Ajith's Vivegam in overseas.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil