»   »  விவேகம்: தகுதியில்லாத அந்த விமர்சகரை சும்மா விடக் கூடாது- ராகவா லாரன்ஸ் கொந்தளிப்பு

விவேகம்: தகுதியில்லாத அந்த விமர்சகரை சும்மா விடக் கூடாது- ராகவா லாரன்ஸ் கொந்தளிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையுலகினரை கேட்டுக் கொண்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

விவேகம் படம் வெளியானதில் இருந்து அதை பலரும் கண்டமேனிக்கு விமர்சனம் செய்கிறார்கள். இந்த நெகட்டிவ் விமர்சனம் வேண்டும் என்றே செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விவேகம் பற்றி போஸ்ட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

விவேகம்

விவேகம்

அஜீத் சார் நடித்த விவேகம் படம் பார்த்தேன். அவரின் கடின உழைப்புக்கு ஹாட்ஸ் ஆஃப். பலர் வெளியிட்டுள்ள விமர்சனங்களையும் பார்த்தேன். அவர்கள் படத்தின் பிளஸ் மற்றும் மைனஸை குறிப்பிட்டுள்ளனர்.

ப்ளூ சட்டை

ப்ளூ சட்டை

ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் பார்த்து வருத்தம் அடைந்தேன். படத்தில் பல அருமையான காட்சிகள் உள்ளன. ஆனால் அவர் கடின உழைப்பு மற்றும் படக்குழு பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

 அஜீத் சார்

அஜீத் சார்

ப்ளு சட்டை மாறனின் விமர்சனம் பட விமர்சனம் போன்று இல்லை. அது அஜீத் சார் மற்றும் அவரின் ரசிகர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் போன்றே உள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

படங்கள் பற்றி விமர்சிக்க தகுதியில்லாத ப்ளூ சட்டை மாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சினிமா துறை யூனியன் மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

English summary
Actor Raghava Lawrence has asked the cinema industry union people to take action against Blue sattai Maran for his Vivegam review.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil