»   »  என்னங்க சொல்றீங்க.. 'விவேகம்' படத்தின் கதை இதுதானா..?

என்னங்க சொல்றீங்க.. 'விவேகம்' படத்தின் கதை இதுதானா..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் திரைப்படம் விவேகம். கடந்த வாரம் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் யூ-ட்யூபில் பல சாதனைகளைப் படைத்தது.

இந்தப் படம் வரும் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விவேகம்' திரைப்படம் முழுக்க முழுக்க பல்கேரியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் காடுகள், பனிமலைக்களுக்கிடையே படமாக்கப்பட்டது.

இன்னும் மூன்று நாட்களில் படம் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. கதைக்குள்ள போகலாம் வாங்க...

பயங்கரவாதிகளால் ஆபத்து :

பயங்கரவாதிகளால் ஆபத்து :

சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களின்படி, வெளிநாட்டு சதியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போவது கண்டுபிடிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களும் அரங்கேறுகின்றன.

ரா ஏஜென்ட் :

ரா ஏஜென்ட் :

எதிரிகளின் சதியை முறியடிப்பதற்காக 'ரா' தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஒரு ரகசியக் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் தலைவர் அஜித். இந்த மிஷனில் அஜித்தும் அவரது குழுவும் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் 'விவேகம்' படத்தின் கதை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் கவுன்ட்-டவுன் :

டிஜிட்டல் கவுன்ட்-டவுன் :

ஃபர்ஸ்ட் லுக், டீஸர், டைட்டில் டிஸைன் போன்றவற்றில் காணப்படும் கவுன்ட்-டவுன் போன்ற வடிவங்கள், குறிப்பிட்ட நேரத்துக்குள் எதிரிகளின் தாக்குதலைத் தடுத்து நாட்டைக் காப்பாற்றவேண்டிய ஆபரேஷனுக்கான குறியீடு எனப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆக, கசிந்த இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கலாம்.

'மாஸ்' டெக்னாலஜி :

'மாஸ்' டெக்னாலஜி :

படத்தில், டெக்னாலஜி சார்ந்த விஷயங்களும் நிறைய இருக்கிறதாம். அஜித் உட்பட அனைத்து நடிகர், நடிகைகளும் ஹாலிவுட் படங்களைப் போன்ற காஸ்ட்யூம்களில்தான் நடிக்கிறார்களாம். அதனால், ரசிகர்களுக்கு ஒரு பக்காவான ஹாலிவுட் ஆக்‌ஷன் படம் பார்த்த ஃபீல் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள்.

கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் இது விவேகம் கதையான்னுதான் தெரியலை.

English summary
In social media, a story is sharing by people about vivegam. According to this, ajith acts as a military agent in this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil