»   »  கபாலி சாதனையை முறியடித்த விவேகம் டீஸர்: வச்சு செஞ்சுட்டாங்கல்ல!

கபாலி சாதனையை முறியடித்த விவேகம் டீஸர்: வச்சு செஞ்சுட்டாங்கல்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் பட டீஸர் கபாலி டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் டீஸர் நள்ளிரவு வெளியிடப்பட்டது. டீஸர் அருமை, செம, வேற லெவல், மெர்சல் என்று ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.


இந்நிலையில் விவேகம் டீஸர் புதிய சாதனை படைத்துள்ளது.


கபாலி

விவேகம் டீஸர் வெளியான 12 மணிநேரத்தில் அதை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர், மேலும் 250 ஆயிரம் லைக்ஸ் கிடைத்துள்ளது. இதன் மூலம் கபாலி பட டீஸர் படைத்த சாதனையை விவேகம் டீஸர் முறியடித்துள்ளது.


விவேகம்

கபாலி டீஸர் வெளியான 24 மணிநேரத்தில் அதை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர். இதே வேகத்தில் சென்றால் விவேகம் டீஸர் புதிய சாதனைகளை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


தல ரசிகர்கள்

டீஸர் வெளியாகப் போகிறது என்று இயக்குனர் சிவா அறிவித்ததில் இருந்து யூடியூப்பில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்று முடிவு செய்த தல ரசிகர்கள் நினைத்ததை சாதித்துவிட்டனர்.


விஜய் ரசிகர்கள்

விவேகம் டீஸரை பார்த்துவிட்டு இளைய தளபதி விஜய் ரசிகர்கள் கூட பாராட்டு தெரிவித்துள்ளனர். அதை அஜீத் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Vivegam teaser has got 5 million views and 250k likes within 12 hours of its release. Ajith starrer teaser beats Kabali teaser record.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil