»   »  நள்ளிரவில் வெளியானது விவேகம் டீஸர்.. தல ரசிகர்கள் ஹேப்பி

நள்ளிரவில் வெளியானது விவேகம் டீஸர்.. தல ரசிகர்கள் ஹேப்பி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் திரைப்படத்திற்கான முதல் டீசர் இரவு 12.01 மணிக்கு வெளியிடப்பட்டது.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வாலும், முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாஸனும் நடித்துள்ளார்கள்.


 Vivegam Teaser released

படத்தின் டீஸர் எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ட்வீட் மூலம் நல்ல செய்தி கூறினார். அதாவது மே 18ம் தேதி டீஸர் வெளியிடப்படும் என்று ட்வீட்டினார் சிவா. ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக டீஸர் ரிலீஸ் தேதியை மே 11ம் தேதிக்கு மாற்றுகிறோம் என தெரிவித்திருந்தார் சிவா.


மேலும் டீசரை வெளியிடும் தயாரிப்பாளர் சத்யஜோதி நிறுவனம், இதற்கென யுட்யூபில் லைவ் கவுன்ட்டவுன் பக்கத்தைத் நேற்று காலையே தொடங்கியது. அந்தப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சரியாக இரவு சரியாக 12.01 மணிக்கு விவேகம் டீஸர் வெளியிடப்பட்டது.


ஒரு தமிழ்ப் படத்தின் டீசருக்கு இதுபோல லைவ் கவுன்ட்டவுன் பக்கம் தொடங்கப்பட்டது அஜித்தின் விவேகத்துக்குத்தான்.


விவேகம் டீஸர்:


English summary
Vivegam Teaser released by Sathya Jyothi Films on today

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil