»   »  'நண்பா விக்ரம் உனக்கெதற்கு விருது?..விவேக்கின் கருத்துக்கு ஷங்கர், தனுஷ் ஆதரவு

'நண்பா விக்ரம் உனக்கெதற்கு விருது?..விவேக்கின் கருத்துக்கு ஷங்கர், தனுஷ் ஆதரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரமுக்கு தேசிய விருதுகள் கிடைக்காதது குறித்து நடிகர் விவேக் சொன்ன கருத்துக்கு, திரையுலகினர் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது.

63 வது தேசிய விருதுகள் விழாவில் நடிகர் விக்ரமுக்கு விருது அறிவிக்கப்படாதது, தமிழ்த்திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Vivek Comment About Vikram loss National Award

இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இதில் பி.சி.ஸ்ரீராம் தேசிய விருதுகள் தன்னுடைய மதிப்பை இழந்து விட்டது என்று சற்றுக் கடுமையாகவே சாடியிருந்தார்.

இதற்கு நடிகர் விவேக் "நண்பா விக்ரம்,"ஐ" காக உடலை பெருக்கினாய்; பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது!".

என்று கவிதை வடிவில் விக்ரமிற்கு ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில் விவேக்கின் இந்த கருத்துக்கு தற்போது திரையுலகினர் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது.

இயக்குநர் ஷங்கர், நடிகர் தனுஷ் ஆகியோர் விவேக்கின் ட்வீட்டை ரீட்வீட் செய்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதில் தனுஷ் ஒருபடி மேலே சென்று 'சரியாகச் சொன்னீர்கள் சார்' என்று கூறியிருக்கிறார்.

Vivek Comment About Vikram loss National Award

விக்ரமுடன் இணைந்து சாமி, அந்நியன், தூள், காதல் சடுகுடு போன்ற படங்களில் விவேக் நடித்திருந்தார்.

English summary
Vivek Comment About Vikram loss National Award, Now Celebrities Agree & Support this Comment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil